ஆலயம் சிறப்புகள்

//ஆலயம் சிறப்புகள்
ஆலயம் சிறப்புகள்2020-03-02T10:10:13+00:00

நமது ஆலயத்தின் தனிச் சிறப்புகள்

நமது ஆலயத்தின் கருவறைகளின் அளவுகள், மண்டபங்கள், தியான மண்டப அமைப்பு அனைத்தும் அன்னையின் வாக்கில் வெளிப்பட்டு அதன்படியே விதி பிசகாமல் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.
ஆலய கருவறையில் மூர்த்தங்களும், அவர்களின் உருவ அமைப்புகளும், அஸ்தங்களும், எந்திரத்தகடுகளும், அன்னையால் அருளப்பெற்று, வரையப்பட்டு, ஸ்தாபிதம் செய்து, முறையாக அன்னை குறித்த நாளிலேயே கலசாபிஷேகங்களும் செய்யப்பட்டுள்ளன.

நமது ஆலயத்தில் உள்ள வழிபாட்டு போற்றிகள் அனைத்தும் (விநாயகர் போற்றி, நவக்கிரக போற்றி, அர்ச்சனை மலர்கள், சிவசக்தி போற்றிகள், மந்திரப்பாவை போற்றிகள், திருமகள் போற்றிகள், சனிபகவான் போற்றிகள், 1008 போற்றி மந்திரங்கள், சக்தி கவசம், வேண்டுதல் கூறு, பராசக்தி கண்ணிகள்) அன்னையின் அருள்வாக்கில் அருளப்பெற்று எழுதப்பட்டவைகள் ஆகும். ஆகவே, இந்த போற்றிகளை முறையாக, புனிதமாக உச்சரித்து, வீட்டில் வழிபடுவதின் மூலம், நாயன்மார்களின் தேவாரம்போல, ஆழ்வார்களின் திவ்யப்பிரபந்தம் போல, தெய்வீக அருள் விரைந்து கிட்டி, எண்ணிய பலன்கள் ஈடேறக் காணலாம்.

சித்தர்களுக்குரிய அருள் தெய்வமான மந்திரப்பாவை உரிய பீஜ எந்திர வடிவப்படி நான்கு கரங்கள் கொண்டு அழகிய தோற்றத்தோடு அமர்ந்து ஆசிபுரிவது தனிச்சிறப்பு.
நமது ஆலயத்தில் 18 சித்தர்கள் யோக நிலையில் அமர்ந்து, பராபரையை தியானித்து வழிபாடு செய்வதாக நம்பிக்கை. ஆதலால், ஆலயத்தில் ஆரவார ஒலிகளோ, வாத்தியக் கருவிகளோ, மணிஓசைகளோ, இல்லாமல் அமைதியாக வழிபாடுகள் செய்யப்படுகிறது.

நமது ஆலயத்தை நாடிவரும் பக்தர்களின் அனைத்துக் குறைகளையும் களையும் பொருட்டு, பலவித வேள்விகள் செய்யப்படுகின்றன. இந்த வேள்விகள் அனைத்தும், கோரக்கர் சித்தரால் தமிழில் மொழி பெயர்த்ததை அன்னை தற்காலத்திற்கேற்றப்படி, விதிகளும், மந்திரங்களும், வேள்வி முறைகளும் வகுத்து அளித்துள்ளார்கள். இவ்வாறு அன்னையே வகுத்தளித்த மந்திரங்களையும், வேள்விகளையும், நிறைவாக செய்யப்படுவதால் நம்பிக்கையுடன் வேள்வி புரிவோர், தாங்கள் எண்ணிய பேறுகளை தெய்வ அருளால் நிச்சயமாக பலன்பெறுவதை காண முடிகின்றது.

இவ்வாறு நமது ஆலயத்தில் வாழ்வியல் குறைகள், பிரச்சனைகள் நீங்க அன்னையின் கருவறையும், செல்வ வளங்களைப்பெற மகாலட்சுமியின் ஆசீர்வாதமும், மந்திரங்கள் மற்றும் எதிரிகளின் இடையூறுகள் நீங்க மந்திரப்பாவை மற்றும் சித்தர்களின் ஆசிகளும், வாழ்வில் உன்னதமாக உயர்ந்து விளங்க ஞானதேவியின் அருளாசியும், ஒருசேரக் கிடைக்கும் உன்னதமான ஆலயம்.

இவர்களை வணங்குவதற்கு முன்னதாக ஆலயத்தில் முதலில் வீற்றிருக்கின்ற விநாயகரை 1 நெய் விளக்கேற்றி வழிபட்டு, தம்முடைய குறைகள் நீங்க, கீழே விளக்கப்பட்டுள்ள முறைப்படி, வழிபாடு செய்து பலன் பெறலாம்.

ஆலயம்

வரவிருக்கும் நிகழ்வுகள்

Pradosham Abhishegam

நவம்பர் 28

Amaavaasai

டிசம்பர் 1

Chathurthi Abhishegam

டிசம்பர் 4

Pournami

டிசம்பர் 15

Sankatahara Chathurthi

டிசம்பர் 18

Subscribe To Newsletter

* indicates required

Speciality of the temple

The Chief sculptor Shri. Dakshinamoorthy refused to sculpt the statue of the Mother to be kept in the sanctum sanctorum, because the specifications given, by the siddhas, did not follow the ‘Silpa Sastra’ rules. The siddhas lit a piece of camphor and in its flame, the sculptor, saw the actual ‘Murti’ and only then he started its construction.

There are two statues in the sanctum; the bigger one adorned with ornaments representing the materialistic (boga) way of life; and the smaller one with closed eyes depicting the spiritual (yoga) way of life.

The Sanctum Sanctorum (Karuvarai in Tamil, main dwelling place of deity) dimensions of various halls (mandapam’s) including the meditation hall was constructed in accordance to the directions of the Divine voice of Mother Annai Aadhiparasakthi.

The idols, its features, placement of instruments in hands, yantras, the sanctum sanctorum and the consecration ceremony had also been done based on specifications given by the Divine Mother and done on the specified date.

The Mother’s temple has four siddhas sitting in four corners :

  • Thayumanavar, in the South East preaching Guru Bakti

  • Vallalar, in the Sout West preaching Samarasa Sanmarg

  • Pattinathar in the North West preaching Gnana marg

  • Pambatti Siddhar in the North East preaching Dhyana Yoga

Pottri Valipadalgal – தமிழ் போற்றி வழிபாடுகள்

Unlike all other temples, musical instruments are never played inside the temple premises. No bells are ever rung during poojas either. The temple always maintains a silent atmosphere which is conducive for meditation and prayer.

When we circumambulate these siddhas cast their looks on us and gradually change our lives and take us into their fold.

The rituals and mantras used are in the siddha tradition of worship and are extremely effective.

The moola (seed) mantras and mantras for various other prayers / poojas are being given by the Mother, on as and when required basis.

All the sacred chants or Manthras like (Vinayagar Potri, Navagraha Potri, Archanai Malargal, Sivasakthi potrigal, Mandhirappaavai Potrigal, Thirumagal Potrigal, Sanibhagawan Potrigal, 1008 Potri Mandhirangal, Sakthi Kavasam, Vendudhal Kuuru, Parasakthi Kannigal) were received from the Divine voice of Mother. When these devotional chants are chanted at home, with purity and sincerity, blessings of the divine power, synonymous to that of chantings like Nayanmar’s Devaram, Alwar’s Dhivyaprabandham can be achieved.

The uniqueness of the temple is the sacred Mandhirappaavai Mother – the prime deity of Siddha’s, with beeja yantra and is beauty appears with four hands and bless the devotees.

In our temple it is believed that the 18 Siddhas are in yogic state before the Mandhirappaavai Mother, meditating upon the Divine Mother. Hence, the prayers in the temple are conducted silently without loud noises of the traditional bells or other musical instruments.

The temple is run, for 12 months at a stretch, by one of the eighteen siddhas, in turn.

The audit reports are verified by the Mandira Pavai once a quarter. Unbeleivable? But, it is true. The modus operandi is secret.

All devotees, irrespective of their caste, colour and creed, are permitted to do Abishekam of the Mother on all full moon days, subject to certain laid down (see Sakti Malai) conditions.

To redress the grievances of devotees visiting the temple, various yagnas (Known as Velvigal in Tamil) are preformed. The rules, sacred chants and procedures for performing these yagnas, which were originally translated into Tamil by Korakkar Siddhar, has been adopted and modified and given to us by the Divine Mother accordingly to suit modern times. As we follow the procedures as stipulated by the Divine Mother along with due faith and sincerity, all your ambitions will be fulfilled.

The temple serves as a one stop destination for resolving shortcomings and problems of life by the grace of Divine Mother Annai Aadhiparasakthi, relief from evil elements and enemies by the grace of sacred Mandhirappaavai Mother and Siddhargal, abundance in wealth by the grace of Goddess Mahalaskhmi and wisdom by the grace of Goddess Gnanadevi.

The Temple Personnel do not go around with printed receipts doing door to door canvassing. They ask Her and She provides them.

Before seeking the blessings of above mentioned deities, the blessings of Lord Ganesh should be sought by lighting 1 ghee lamp to avoid hindrances. The prayer procedures are explained in the forthcoming pages.

News Archives

    வரவிருக்கும் நிகழ்வுகள்

    Pradosham Abhishegam

    நவம்பர் 28

    Amaavaasai

    டிசம்பர் 1

    Chathurthi Abhishegam

    டிசம்பர் 4

    Pournami

    டிசம்பர் 15

    Sankatahara Chathurthi

    டிசம்பர் 18