மாதாந்திர பூஜைகள்

//மாதாந்திர பூஜைகள்
மாதாந்திர பூஜைகள்2020-12-29T07:51:59+00:00

 பௌர்ணமி வழிபாடு(Full moon day worship)

நமது ஆலயத்தில் பௌர்ணமி ஒரு மிக சிறப்பான திருநாள். பௌர்ணமி நாட்களில் 18 சித்தர்கள் நமது ஆலயத்தில் அருவ நிலையில் அன்னை மந்திரப்பாவையை வணங்கி செல்வதாக நம்பிக்கை. அன்று ஆலயம் வரும் பக்தர்கள் மீது சித்தபெருமக்களின் பார்வை பட்டு சகல பாக்யங்களும் அள்ளித்தருவார்கள். ஒவ்வொரு பௌர்ணமி அன்று நமது ஆலயத்தில் அதிகாலை அபிஷேகம் தொடங்கி நள்ளிரவு வரை பூஜைகள் நடைப்பெற்று வருகிறது.

பௌர்ணமி நாட்களில் நடைப்பெரும் சிறப்பு வழிபாடுகள்:

  • சித்தர் மலர் மாலை – காலை 7 மணிக்கு செய்யப்பட்டு நாள் முழுவழும் 18 சித்தர்கள் மலர் அலங்காரத்துடன் அருள் பாலித்து வருவார்கள்.
  • அன்னதானம் – காலை 11:30 மணிக்கு துவங்கி கிட்டத்தட்ட 3000 பக்தர்கள் அன்னையின் அருள் பிரசாதத்தை அன்னதானமாக உண்பர்.
  • வலம்புரி சங்கு – மாலை 5:00 மணிக்கு அன்னை மகாலக்ஷ்மியின் அருள் வேண்டி இந்த வழிபாடு நடைப்பெறும்.
  • நள்ளிரவு வேள்வி – இரவு 09:00 மணியளவில் வேள்வி துவங்கி 12:00 மணியளவில் பூர்ணஹுதி நடைப்பெறும்.

சித்தர் மாலை

நாம் உன்னத பெருமக்களை தரிசிக்கும் போது, அவர்களுக்கு மலர் மாலை சாற்றி, அவர்களிடத்து இராஜ கனி எனப்படும் எலுமிச்சை பழத்தைக் கொடுத்து அவர்கள் காலில் விழுந்து ஆசி பெறுவது, மிக உன்னதமான மரபுவழி. இதனால் பெரியோர்களும், மனமகிழ்ந்து தம்மை வணங்கியவர் இடத்து, அன்பு பூண்டு, சகல பேறுகளையும் பெற்று வாழ, மனநிறைவான ஆசி நல்குவர்.

இவ்வாறாகவே, நமது ஆலயத்தில், அளப்பறிய ஆற்றலோடு, யோக நிலையில் ஆழ்ந்து வீற்றிருக்கும் உன்னதமான மகா சித்த புருஷர்களுக்கு, அவர்களின் முழு சக்தியோடு ஆசீர்வாதம் நல்கும் பௌர்ணமி நாளன்று, இச்சிவனடியார்களான, சித்தர் பெருமக்களுக்கு, மலர் மாலை சாற்றி, 10 நிமிடம் மண்டபத்தில் அமைதியாக அமர்ந்து, நம் குறைகள் விலக ஆசீர்வாதம் வேண்டி, அவர்களைப் பணிந்தால், இச்சித்த குருமார்களின் அருளால் எல்லா பாவங்களும் விலகி, கோடி புண்ணியம் செய்த பலன் கூடும்.

தொடர்ச்சியாக சில பௌர்ணமிகள் தோறும், இவ்வாறு மலர் மாலை சாற்றி, குருமார்களின் ஆசீர்வாதம் பெறுவதால், சகல தோஷங்களும் விலகி, நிரந்தர இன்ப வாழ்வு பெறலாம் என்பது திண்ணம்.

அடுத்த சித்தர் மாலை பூஜை:

There are no upcoming events at this time.

பௌர்ணமி அன்னதானம் (Full moon day food serving)

நமது ஆலயத்தில் அன்னதானம்:

நமது நாட்டில் தொண்டர்களுக்கு அமுது அளித்து, அவர்களின் மனம் நிறைவடைந்து வழங்கும் வாழ்த்துக்களை உயர்வாக எண்ணி, ஆலயங்களுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் செய்து வருகின்றனர்.

இதற்கொப்ப நமது ஆலயத்திலும் ஒவ்வொரு பொளர்ணமி நாளன்றும் மதிய வேளையில், ஆலயம் வரும் அனைத்து அன்பர்களுக்கும், நிர்வாகத்தால் இயன்ற அளவு அன்னதானம் செய்து வருகிறோம் . ஆலயம் வரும் அன்பர்களில் சில சித்த பெருமக்களும் ஏதேனும் ஒரு சில தொண்டர்களைப் போல அன்றைய தினம் அன்னதானம் ஏற்று செல்வர் என்பது அன்னையின் வாக்கு. ஆகவேதான் யாருடைய மனமும் சங்கடத்திற்க்கு உள்ளாகாத வண்ணம் அன்புடன் அன்னதானம் அளிக்கும் படி அன்னை கூறியுள்ளார்.
அன்றைய தினம் முழு அன்னதானம் செய்வதின் மூலம் எவ்வுருவிலேனும் வந்து தானம் பெறும் ஒரிரு சித்த பெருமக்களுக்கும் விடுபடாமல் தானம் செய்த புண்ணிய பலன் உண்டாகும். இதனால் இப்பெரியோர்களின் மனநிறைவான ஆசியால் தானம் செய்த குடும்பத்தினரும், அவர்தம் சந்ததியினரும், பல்லாண்டு காலம் எல்லா பேறுகளும் பெற்று சுகமாக வாழலாம்.

அடுத்த பௌர்ணமி அன்னதானம் பூஜை :

There are no upcoming events at this time.

வலம்புரி சங்கு பூஜை

மக்களாகிய நாம் எல்லா வகையான இன்பங்களையும், செல்வங்களையும், பெற்று துன்பங்கள் இல்லாமல் உயிர்வாழவே எண்ணுகிறோம். இதனால் தான் பெரியவர்கள் நம்மை ஆசீர்வதிக்கும் போது 16 வகை செல்வங்களையும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் என்று வாழ்த்துகின்றனர்.
இந்த 16 வகை செல்வங்கள் என்பது நோயின்மை, கல்வி, தனம், தான்யம், அழகு, புகழ், பெருமை, இளமை, அறிவு, சந்தானம் (பிள்ளைச் செல்வம்), வலிமை, தன்னம்பிக்கை, நீண்ட ஆயுள், வெற்றி, நல்வினை, நுகர்ச்சி (இப்பேறுகளை மனதாலும், உடலாலும், அனுபவிக்கும் பேறு) ஆகும்.
நமது நம்பிக்கையின் படி, இந்த 16 வகை செல்வங்களையும் அளிக்கும் வல்லமை பெற்றவர், செல்வத்துக்கு அதிபதியான மகாலட்சுமி ஆவார்.

ஒரு முறை மகான் ஆதிசங்கரர் அவர்கள், தமது சன்னியாச விதிப்படி யாசகம் புரிந்து வரும்போது, மிக வறிய குடும்பத்தில் யாசிக்க நேர்ந்தது. அக்குடும்பத்தில் இருந்த தம்பதியினருக்கு தெய்வ உருவமாகவே காட்சியளித்த மகான் சங்கரருக்கு ஏதும் அளிக்க இயலவில்லையே என்று மனம் வருந்தினர், அதனை அறிந்த மகான் வீட்டில் உள்ள எந்த உண்பொருளாயினும் சிறிது கொடுக்கும் படி வேண்டினார். அவர்களும் வீடு முழுக்க தேடிப்பார்த்து ஒரே ஒரு சிறு நெல்லிவற்றல் இருக்கக் கண்டு, அதனை ஏற்றுக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொண்டனர்.
இத்தகைய உயரிய குணம் கொண்ட தம்பதியினரின் வறுமையைப் போக்க எண்ணம் கொண்டு மகான் ஆதிசங்கரர் மகாலட்சுமியை வேண்டி வழிபட்டார்.

மகாலட்சுமியும் அவரது மனதில் தோன்றி, இத்தம்பதியினர் பூர்வத்தில் செய்த கொடிய வினைகளால் இந்த வறிய வாழ்க்கை வாழ வேண்டும் என்று விதி உள்ளதால், நாம் இவர்களுக்கு எவ்வகையிலும் உதவ இயலாது என்று கூறினார்.

அதற்கு மகான் ஆதிசங்கரர் என்பொருட்டு நீங்கள் இப்பிறப்பில் உயர்ந்த குணங்களோடு வாழும் இத்தம்பதியினருக்கு வறுமையைப் போக்கி, செல்வ வளம் அளித்தே ஆக வேண்டும் என்று கேட்டுக் கொண்டார், பிறகு மகாலட்சுமியை நினைத்து கனகதாரா ஸ்தோத்திரம் எனும் ஸ்தோத்திர பாமாலையை இயற்றி பாடினார். மகாலட்சுமியும், மகான் ஆதிசங்கரரின் விருப்பத்தை பூர்த்தி செய்ய, அத்தம்பதியினரின் இல்லத்தில், தங்க நெல்லிக்கனிகளை மழை போல் பொழிவித்தார். அத்தம்பதியினரும் வறுமை நீங்கி, வளமாக வாழ்ந்ததாக ஆதிசங்கரர் வரலாற்றில் காணப்படுகின்றது.

இவ்வாறு நாம் எப்பாவங்களை, வினைகளை செய்திருந்தாலும், நாம் மகாலட்சுமியை சரணடைந்தும், நம் பொருட்டு மகான்களை பிரார்த்தனை செய்யச் சொல்லியும், எல்லா பேறுகளையும் வாழ்வில் பெற்று மகிழ்ச்சியாக வாழ முடியும் என்பது உண்மை.
நமது ஆலயத்தில் வீற்றிருக்கும் மகாலட்சுமியை அன்னையை வழிபட்டும், மற்றும் இவ்வாலயத்தில் வீற்றிருக்கும் சிவனடியார்களாக, ஞானியர்களாக விளங்கும் சித்த குருமார்களை வணங்கி, வழிபட்டு வேண்டிக் கொள்வதாலும், எல்லா ஐஸ்வரியங்களையும் பெறலாம்.

ஒவ்வொரு பௌர்ணமி நாளன்றும், மகாலட்சுமிக்குரிய சித்தர் வழிபாட்டு மந்திரங்கள், போற்றிகள், சொல்லி சிறப்பு பூஜைகள், ஆராதனைகள் மாலையில் செய்யப்படுகின்றன.

அடுத்த வலம்புரி சங்கு பூஜை:

There are no upcoming events at this time.

சங்கடஹர சதுர்த்தி அபிஷேகம்

சங்கடஹர சதுர்த்தி தேய்பிறை சதுர்த்தி அன்று விநாயகர் பெருமானுக்கு செய்யப்படும் சிறப்பு வழிபாடாகும். இந்த வழிபாட்டில் கலந்துக்கொள்ளும் பக்தர்களுக்கு வினைதீர்த்த விநாயகர் சகல பாவங்களையும் போக்கி, நல்ல பலங்களை அள்ளித்தருவார் என்பது நம்பிக்கை.

அடுத்த சங்கடஹர சதுர்த்தி பூஜை:

Sankatahara Chathurthi

ஏப்ரல் 27

பிரதோஷம்

மோக்ஷோபாயமாக கருதப்படும் ப்ரதோஷ வழிபாடு நமது பள்ளிக்கரணை சக்தி ஆலயத்தில் ஒவ்வொரு தேய்ப்பிறை திரியோதசி அன்று மாலை 5:30 மணிக்கு  குரு மகேஷ்வரருக்கு அபிஷேகமும், பிரதோஷ பாடல்கள் பாரயணமும் மெய் சிலிர்க்க வைக்கும்.

இதில் கலந்துக்கொண்டு ஆலகால விஷத்தை அருந்தி நம்மை காத்த பரமனின் ஆசியை பரிபூரணமாக பெருங்கள்.

இந்த வழிபாட்டிற்கு கட்டணம் எதுவும் கிடையாது.

Next பிரதோஷம்:

There are no upcoming events at this time.

Worship

வரவிருக்கும் நிகழ்வுகள்

Sankatahara Chathurthi

ஏப்ரல் 27

Amaavaasai

மே 7

Subscribe To Newsletter

* indicates required

News Archives

    வரவிருக்கும் நிகழ்வுகள்

    Sankatahara Chathurthi

    ஏப்ரல் 27

    Amaavaasai

    மே 7