நிர்வாகத்தை பற்றி

/நிர்வாகத்தை பற்றி
நிர்வாகத்தை பற்றி2020-03-05T12:19:42+00:00

ஆலய நிர்வாகம்

இந்த ஆலயம் சட்டப்பூர்வமாக பதிவு செய்யப்பட்ட அறகட்டளை மூலம் நிர்வகிக்கப்படுகிறது. முறையாக அமைக்கப்பட்ட நிர்வாகிகள் குழு ஆலய நிர்வாகத்தின் அனைத்து அம்சங்களையும் செவ்வனே மேற்பார்வையிடுகிறது. ஆலயத்தில் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு செயல்பாட்டிற்கும், செலவழித்த ஒவ்வொரு பைசாவிற்கும், நிர்வாகிகள் குழுவில் உள்ள அனைவரும் அன்னை ஆதிபராசக்தி, மந்திரப்பாவை மற்றும் 18 சித்தர்களுக்கு பதிலளிக்க வேண்டும் என்பது நம்பிக்கை.
இந்த அறக்கட்டளையிற்கு நன்கொடை அளிப்போருக்கு இந்திய அரசிடமிருந்து 80G யின் கீழ் வருமான வரி விலக்கு கிடைக்கும்.

நிர்வாகம்

இந்த ஆலயத்தில் துப்புரவு மற்றும் மாதாந்திர அன்னதான சமையல் பொறுப்பிற்கு மட்டும் ஒப்பந்த அடிப்படையில் தொழிலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். அதைத்தவிர அனைத்து ஆலய செயல்பாடுகளையும் தொண்டர்கள் செவ்வனே மேற்கொள்கிறார்கள்.

ஆலயத்தில் நடக்கும் பூஜைகள், வேள்விகள், கருவறை பணிகள், நிர்வாக மற்றும் அலுவலக பணிகள் அனைத்தும் பக்தர்களே அன்னைக்கு தங்களின் தொண்டாக செய்து வருகிறார்கள்.

ஆலய பணிகள் செய்யும் அனைவருமே அன்னை தனது அருள்வாக்கில் தந்தருளிய விதிமுறைகளை பின்பற்றி, முறையே பயிற்சிகள் மேற்கொண்டு செயல்படுத்தப்படுகின்றது.

ஆலய அலுவலகம்

வினை தீர்த்த விநாயகரின் சன்னதிக்கு அருகே அமைந்துள்ள இந்த ஆலய அலுவலகம், ஆலயத்தின் நிர்வாக மையமாக உள்ளது. பக்தர்கள் இங்கு நன்கொடை செலுத்தவும், வழிபாட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கவும் இங்கு வருகிறார்கள். குறிப்பாக, நெய் தீபம், அர்ச்சனை சீட்டு, அருள்வாக்கு டோக்கன் போன்றவை.

அதுமட்டும் இன்றி இந்த அலுவலகத்தில்

  • அறகட்டளையின் வெளியீடுகளான: கையேடுகள், மந்திர நூல்கள், இதர புத்தகங்கள், CDக்கள்,
  • வழிபாட்டிற்கு தேவையான லாமினேடெட் மற்றும் ஃப்ரேம் படங்கள்
  • சிவ லிங்கம், நந்தி, பாணலிங்கம், வலம்புரி சங்கு
  • மந்திரப்பாவை தீர்த்தம் போன்றவை விற்கப்படுகிறது.

மேலும் இந்த அலுவலகம் ஆலயத்திற்கு வரும் பக்தர்களுக்கு ஏற்படும் கேள்விகள் மற்றும் சந்தேகங்களை தீர்க்கும் ஒரு சேவை மையமாகவும் செயல்படுகிறது.

தொலைபேசி: 044-2246 0820, 2246 2910

மின்னஞ்சல்: pallikaranaisakthi@gmail.com  contact.us@pallikaranaisakthi.org

News Archives

    வரவிருக்கும் நிகழ்வுகள்

    Amaavaasai

    மே 7

    Pournami

    மே 23