16 வகை செல்வங்களையும் (16 வகை செல்வங்கள் என்பது நோயின்மை, கல்வி, தனம், தான்யம், அழகு, புகழ், பெருமை, இளமை, அறிவு, சந்தானம் (பிள்ளைச் செல்வம்), வலிமை, தன்னம்பிக்கை, நீண்ட ஆயுள், வெற்றி, நல்வினை, நுகர்ச்சி (இப்பேறுகளை மனதாலும், உடலாலும், அனுபவிக்கும் பேறு ஆகும்) தமக்கு தந்தருள வேண்டுமென்று சக்தி உபாசகர் அபிராமி பட்டர் அன்னை அபிராமியை வேண்டி பதிகம் பாடியுள்ளார். இந்த 16 வகை செல்வங்களும் வாய்க்கப் பெற்ற ஒருவர் இம்மண்ணுலகிலும்,விண்ணுலகிலும் நிறைவான வாழ்வு வாழ்வார்கள் என்பது திண்ணம்.
நம்முடைய ஊழ்வினை பயன்களால் இந்த 16 வகை செல்வங்களையும் அடைய முடிவதில்லை. இதனால், நாம் பலவகை துன்பங்களுக்கு ஆளாகி சிரம வாழ்வு வாழ வேண்டியுள்ளது. எக்காலத்திலும் இவ்வாறு சிரம வாழ்வு வாழ்ந்தவர்கள் வையகத்தில் இருந்தனர். சித்தர் பெருமான் சட்டை நாதர் அக்காலத்தில் தம்மை அண்டி வந்த பக்தர்களுக்கும், அன்பர்களுக்கும் அவர்கள் கவலைகளை போக்கிட இந்த 16 வகை செல்வங்களையும் அளிக்கவல்ல மகாலக்ஷ்மியை வேண்டி வழிபாடுகள் செய்து இந்த 16 வகை செல்வங்களையும் பெற்று சிறப்பாக வாழ சில வழிவகைகளை செய்தார்.
பதினாறு வகையான செல்வங்களையும், வாழ்வில் எல்லாவித வெற்றிகளையும், கீர்த்திகளையும் பெற்று சகல சம்பத்துடன் காலம் முழுவதும் மன மகிழ்சியோடு வாழச் செய்யும் வேள்வி. இந்த மந்திரத்திற்கு அதிபதி கௌடில்ய மகரிஷி ஆவார். திருமூலர் அந்த மகரிஷி மூலம் மந்திரங்களை பெற்று அதை கோரக்க சித்தருக்கு வெளிப்படுத்தினார். அவர் அம்மந்திரங்களை சித்தாகம விதிப்படி, தமிழ் முறையில், வகுத்து கொடுத்த மிக உன்னதமான வேள்வி ஆகும்.
மேற்கூறிய வேள்வி விவரங்கள் யாவும் அன்னையின் அருள் வாக்கில் வெளிப்பட்டு, விபரங்கள், விதிகள் வகுக்கப்பட்டு, வேள்விகள் முறையாக நமது ஆலயத்தில் நடைபெறுகின்றன.
ஐஷ்வர்ய வேள்விpksak_admin2020-03-02T13:13:03+00:00