வருடாந்திர பூஜைகள்

//வருடாந்திர பூஜைகள்
வருடாந்திர பூஜைகள்2020-03-05T12:14:36+00:00

வருடாந்திர பூஜைகள்

அன்னையின் அருள்வாக்கில் தோன்றிய பல வழிபாட்டு முறைகளை நாம் சிறப்பாக செய்துக்கொண்டு வருகிறோம். சித்தாகம விதிகளின் அடிப்படையில் சில வழிபாடுகள் வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே செய்யப்படுகின்றன. இதில் தவறாமல் கலந்துக்கொண்டு அன்னையின் ஆசீகளை பரிபூரணமாக பெற்றிடுவீர்.

மந்திரப்பாவை ஜெயந்தி

சித்த பெருமக்களின் குருவாகவும் தாயாகவும் விளங்கும் அன்னை மந்திரப்பாவையின் அவதாரத்திருநாள் இன்று. இது சித்திரை மாதம் பூச நட்சத்திரத்தன்று கொண்டாட படுகிறது. சித்தாகம விதிப்படி முறையே கலசம் வைத்து, வேள்வி வளர்த்து அன்னையை வழிபடும் திருநாள். அன்று ஆலயம் வரும் பக்தர்களின் மேல், சித்த பெருமக்களின் பார்வை பட்டு குறைகள் நீங்கி, வளம் பெருகும்.

ஆடி பூரம்

சக்தி திருத்தலம் என்பதால் ஆடி பூரம் அன்று அன்னைக்கும், அன்னை மந்திரப்பாவைக்கும் வளையல் காப்பு சாற்றி வழிபடும் நன்நாள். பெண்கள் திரளாக வந்து பொங்கலிட்டு, அன்னையின் பிரசாதமாக வளையல் பெற்று செல்லும் ஒரு திருநாள்.

குழந்தை பாக்யம் வேண்டுவோர் கண்டிப்பாக ஆடிப்பூரம் அன்று அன்னையை தரிசிக்க வேண்டும்.

நவராத்திரி

நவராத்திரி நாட்களில் அன்னைக்கு 10 திவ்ய அலங்காரங்கள் செய்து வணங்கி வருகிறோம். இந்த புண்ணிய காலத்தில் அன்னை ஒவ்வொரு நாளும் சக்தியின் ஒவ்வொரு அம்சத்தில் இருப்பது தனிச்சிறப்பு. சுண்டல் பிரசதம் அளித்து வரும் பக்தர்களை ஆலய நிர்வாகம் அன்போடு வரவேற்கிறது

 

குரு பூஜை

ஆங்கில நாள்காட்டியின் படி ஒவ்வொரு செப்டம்பர் 11 ஆம் நாள் நமது ஆலயத்தில் குரு பூஜை நடைபெற்றுவருகிறது. இன்நாளில் சித்தாகமவிதியின் படி குரு மார்களை வணங்கி வேள்வி வளர்த்து வணங்குவது தனிச்சிறப்பு. ஒவ்வொரு ஆண்டும் 18 சித்தர்களில் ஏதேனும் ஒரு சித்தர் நமது ஆலயத்தில் குருவாக வந்து நிர்வாகத்தை வழிநடத்துகிறார் என்பது நம்பிக்கை. இது இந்த ஆலயத்தின் மற்றோரு தனியம்சம்.

இந்த வேள்வியில் கலந்துக்கொள்ளும் பக்தர்களின் மேல் வருகை புரியும் குருவின் பார்வை பட்டு, கோடி நன்மைகள் கிட்டும்.

தை அமாவாசை

திருக்கடையூர் பட்டருக்கு, அன்னை அபிராமி, அமாவாசை அன்று பௌர்ணமி நிலா காட்டிய திருநாள், தை அமாவாசை. ஆண்டு தோறும் அன்று மாலை நமது ஆலய முகப்பு பகுதியில் அமைந்துள்ள அபிராமி பட்டரின் சுதை வேலைப்பாட்டில், இந்த நிகழ்ச்சி ஒரு ஒளி-ஒலி காட்சியாக அரங்கேற்றப்படுகிறது.

இறை நம்பிக்கையை உணர்த்தும் இந்த உத்தம நிகழ்ச்சி, அபிராமி பட்டர் அருளிய அபிராமி அந்தாதி பாராயணத்தோடு நடைபெறும். அனைவரும் தங்கள் குடும்பத்துடன் கண்டு கழிக்க வேண்டும். நிச்சயமாக குழந்தைகளை அழைத்து வாருங்கள்.

வாங்க அன்னையின் அருள் பெருக்கை உணரலாம்.

இருமுடி

அன்னையின் பால் நமது பக்தியை வெளிப்படுத்தும் ஒரு வழிபாட்டு முறை தான் இருமுடி சமர்ப்பணம். இந்த வழிபாட்டில் கலந்துக்கொள்ளும் அனைத்து பக்தர்களின் முன்வினை மற்றுமின்றி வருங்காலத்தில் தாங்கள் செய்ய இருக்கும் வினைகளும் அகலும் என்பது நம்பிக்கை.

இருமுடி சமர்ப்பணம் செய்யும் வழிமுறை (அலுவலகத்தை அணுகி தெளிவு படுத்திக்கொள்ளுங்கள்)

  • முதல் நாள் ஆலயம் வந்து சக்தி மாலை அணிந்துக்கொண்டு விரதத்தை துவங்க வேண்டும்.
  • விரத காலத்தில், தினம் இரு வேளை உடலை தூய்மைசெய்து, செவ்வாடை அணிந்து, அன்னையின் திருவுருவப்படத்தின் முன்னர் விநாயகர் போற்றி, அர்ச்சனை மலர்கள் மற்றும் 1008 போற்றிகள் கூறி வழிபட வேண்டும்.
  • இறுதி நாள் அன்று ஆலயம் வந்து தங்கள் இல்லங்களில் இருந்து கொண்டு வந்த இரு முடி பொருட்களை முறையே கட்டி, செவ்வாடை அணிந்து, ஆலயம் வளம் வந்து, இறுதியில் அன்னையின் கருவறை அருகில் சமர்ப்பணம் செய்ய வேண்டும்.

குறிப்பு: இதற்கு கட்டணம் செலுத்தி ஆலய அலுவலகத்தில் ரசீது பெற்றுக்கொள்ளுங்கள்.

அன்னாபிஷேகம்

ஐப்பசி மாத பௌர்ணமி அன்று அன்னாபிஷேகம் நமது ஆலயத்தில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. வினைதீர்த்த விநாயகரின் அன்னாலங்காரத்தை கண்டு ரசித்து பிரசாதத்தை உண்டு மகிழுங்கள்.

பால் குடம்

அன்னையின் பால் நமது பக்தியை வெளிப்படுத்தும் ஒரு வழிபாட்டு முறை தான் பால் குடம். இந்த வழிபாட்டில் கலந்துக்கொள்ளும் அனைத்து பக்தர்களின் கஷ்டங்கள் நீங்கி செல்வ செழிப்பு பெறுகும் என்பது நம்பிக்கை

பால்குடம் சமர்ப்பணம் செய்யும் வழிமுறை (அலுவலகத்தை அணுகி தெளிவு படுத்திக்கொள்ளுங்கள்)

  • முதல் நாள் ஆலயம் வந்து சக்தி மாலை அணிந்துக்கொண்டு விரதத்தை துவங்க வேண்டும்.
  • விரத காலத்தில், தினம் இரு வேளை உடலை தூய்மைசெய்து, செவ்வாடை அணிந்து, அன்னையின் திருவுருவப்படத்தின் முன்னர் விநாயகர் போற்றி, அர்ச்சனை மலர்கள் மற்றும் 1008 போற்றிகள் கூறி வழிபட வேண்டும்.
  • இறுதி நாள் அன்று ஆலயம் வந்து தங்கள் இல்லங்களில் இருந்து கொண்டு வந்த பால் நிறைந்த குடத்தை தலையில் வைத்து, செவ்வடை அணிந்து, ஆலயம் வளம் வந்து, இறுதியில் அன்னையின் கருவறை அருகில் சமர்ப்பணம் செய்ய வேண்டும்.

குறிப்பு: இதற்கு கட்டணம் செலுத்தி ஆலய அலுவலகத்தில் ரசீது பெற்றுக்கொள்ளுங்கள்.

வழிபாடு

வரவிருக்கும் நிகழ்வுகள்

Ankila varudappirappu

ஜனவரி 1, 2026

Ankila varudappirappu

ஜனவரி 1, 2027

Subscribe To Newsletter

* indicates required

News Archives

    வரவிருக்கும் நிகழ்வுகள்

    Ankila varudappirappu

    ஜனவரி 1, 2026

    Ankila varudappirappu

    ஜனவரி 1, 2027