சமுதாய பணிகள்
நமது ஆலயத்தில் நடைபெற்ற சில சமுதாயப் பணிகள் தங்களுடைய பார்வைக்காக:
பௌர்ணமி தோறும் சுமார் 2000 பேருக்கு மதியம் அன்னதானம் வழங்கப்படுகிறது.
ஒவ்வொரு தமிழ் வருடபிறப்பு மற்றும் ஆங்கில வருடபிறப்பு நாளன்றும் ஆலயம் வரும் அன்பர்களுக்கு அன்று முழுவதும் பிரசாதம் வழங்கப்படுகிறது. மேலும் வாரம் தோரும் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமை மாலை, ஆலயம்வரும் அன்பர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது.
மாதம் தோறும், எண் 12, திருவீதியம்மன் கோயில் தெரு, மயிலாப்பூர், சென்னை-4ல் உள்ள Lotus Blind Welfare Trust of India வில் உள்ள 80 பார்வையற்ற மாணவிகளுக்காக மளிகைச்செலவாக ரூ.10,000- வீதம் வழங்கப்படுகிறது.
மாதந்தோறும் உணவுப் பொருளாக பால் மற்றும் பால்பவுடர் வாங்குவதற்காக சென்னை-37, மேற்கு முகப்பேர், 3வது பிளாக்கில் இயங்கி வரும் கலைச் செல்வி கருணாலயா சோசியல் வெல்பேர் சொசைட்டி க்கு ரூ.6,000 – வீதம் கொடுக்கப்படுகிறது.
மாதந்தோறும் உணவுப் பொருட்களுக்காக சென்னை-45, தாம்பரம், லோகநாதன் தெருவிலுள்ள குட்லைப் சென்டரிலுள்ள மாணவ-மாணவிகளுக்காக மளிகைச் செலவாக ரூ.6,000-இமும் மேலும் ஆண்டுதோறும் 2 செட் பள்ளிச்சீருடைகள் ரூ.275,000- மற்றும் தீபாவளித் திருநாளையொட்டி தலா இரண்டு வகை புத்தாடைகள், இனிப்பு, பட்டாசு வகைகள் முதலியன வழங்கப்படுகிறது.
இலவச யோகா மற்றும் தியான பயிற்சி வகுப்புகள் 2003 ஆண்டு முதல் ஞாயிறு தோறும் காலை 7.00 மணி முதல் 9.00 மணி வரை நடத்தப்பட்டு வருகிறது. ஒரு வகுப்பிற்கு ரூ.1,000- வீதம் வழங்கப்படுகிறது.
ஆண்டுதோறும் சைதை மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் மடுவங்கரை மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மேலும் ஆண்டுதோறும் டாக்டர். தர்மாம்பாள் அரசினர் மகளின் தொழிற்நுட்ப பயிலக கல்லூரி தியான மையத்துடன் இணைந்து நாட்டு நலப்பணித் திட்டங்களை மேற்கொள்கின்றது. மாணவிகள் தங்குவதற்காக இடவசதி மற்றும் உணவுக்கான ஏற்பாடுகளையும் தியான மையம் சிறப்பாக செய்கிறது.
பள்ளிக்கரணை மனோகர் நகர் குடியிருப்பு பகுதியில் ஆழ்துளை குழாய் போட்டு பொது மக்கள் உபயோகிக்கும் விதத்தில் தயார் செய்து கொடுக்கப்பட்டது.
நாமக்கல், முத்துகாப்பட்டி அஞ்சலி தெற்கு தெரு, எண்-4,92ல் வசித்துவரும் செல்வி சூ. மோகனப்பிரியா, டி. நடேசன் அவர்கள் கண் பார்வை பெறும் பொருட்டு அறுவைச் சிகிச்சைகு மருத்துவச்செலவுத் தொகை வழங்கப்பட்டது.
ஆண்டுதோறும் மாணவ மாணவிகளுக்காக கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
அண்ணா நகரில் உள்ள காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத ஏழை மாணவர்கள் பயிலும் MCJ சிறப்பு உயர்நிலைப் பள்ளிக்கு ரூ. 1,70,000/- மதிப்புள்ள கணிணிகள் மற்றும் நாற்காலிகள் 24.11.2011 அன்று வழங்கப்பட்டது.