இலட்சார்ச்சனை பெருவிழா – (12.12.2020, 13.12.2020, 14.12.2020)
நிகழும் சார்வரி வருடம்,கார்த்திகை மாதம் 27,28,29 முறையே சனி, ஞாயிறு மற்றும் திங்கட்கிழமை ஆகிய தினங்களில் (12.12.2020, 13.12.2020, 14.12.2020) நமது ஆலயத்தில் அன்னை ஆதிபராசக்தி, மந்திரப்பாவை மற்றும் சித்தர்களின் திருவருள் துணை கொண்டு இலட்சார்ச்சனை பெருவிழா மூன்று நாட்கள் தொடர்ச்சியாக மிகச்சிறப்பாக நடைபெற உள்ளது.
இந்த இலட்சார்ச்சனையில் சங்கல்பம் செய்து கலந்துகொள்ள விரும்புவோர் ரூ.251/- (ரூபாய் இருநூற்று ஐம்பத்தி ஒன்று மட்டும்) நிர்வாகத்திடம் செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ள வேண்டுகிறோம்.
இந்த பெருவிழாவில் அன்பர்கள் அனைவரும் கலந்துகொண்டு அன்னையின் அருளாசியையும், மந்திரப்பாவை மற்றும் சித்தர் பெருமக்களின் நல்லாசியினையும் நிறைவாகப் பெற்று வாழ்வில் வளமோடு வாழ வேண்டுகிறோம்.
இலட்சார்ச்சனை நடைபெறும் நேரங்கள்
1.சனிக்கிழமை (12/12/2020)
காலை – 9:00AM -10:30AM
பிற்பகல் – 1:00 PM – 2:30PM
மாலை – 5:00PM – 6:30PM
2.ஞாயிற்றுக்கிழமை (13/12/2020)
காலை – 9:00AM -10:30AM
பிற்பகல் – 1:00 PM – 2:30PM
மாலை – 5:00PM – 6:30PM
3. திங்கட்கிழமை (14/12/2020)
காலை – 9:00AM -10:30AM
பிற்பகல் – 1:00 PM – 2:30PM
மாலை – 3:00PM – 4:30PM