மாந்தருக்கு வரும் பிணிகளில் சில எளிய மருத்துவங்களாலும், சில அரிய மருத்துவ முறைகளாலும், சில இரண சிகிச்சைகளாலும் குணமாகின்றன.
எவ்வகை சிகிச்சை முறைகளானாலும், இறைவனை வணங்கி, ஆசி பெற்று, மருத்துவம் செய்து கொள்ளும் போது மட்டும், பூரணமாய், எளிதாய், நிறைவாய் குணமாகின்றது.
ஆனால் நம்முடைய கடின வினைகளால், நமது ஆயுளின் இடையில் ஓரிரு முறை கண்டங்களாக வரும் மாரண நோய்களை குணப்படுத்துவது அரிது. வைத்தியம் புரியும் மருத்துவர்களும் இந்நோயை குணப்படுத்த இறைவனை சரணடைவது ஒன்றே வழி என்று, இறுதியில் கைவிட்டு விடுவர்.
நமது உடலில் 96 வகை தத்துவங்களை, சமப்படுத்தும் மூன்று முக்கிய நாடிகளாக வாத, பித்த, சிலேத்தும(கபம்) நாடிகள் உடலை சமப்படுத்தி, ஆரோக்கியமாக இயக்கி வருகின்றன. இந்த நாடிகளில் ஏதேனும் ஏற்ற, இறக்கங்கள் ஏற்பட்டால், அதற்கேற்றவாறு, உடலில் மாற்றங்களும், நோய்களும் ஏற்படும்.
இந்த நாடிகளுக்கு உயிரூட்டும் சக்தியாக, சூட்சுமமாக அமிர்த, நச்சு எனப்படும் இரு வகை நாடிகள் செயல்படுகின்றன. இதில், கண்ட காலங்களில், நச்சு நாடியின் ஆதிக்கம் அதிகம் பெற்று செயல்படும் போது, வாத, பித்த, சிலேத்தும(கபம்) நாடிகள் பிராண சக்தியை இழந்து, பலவீனம் அடைந்து, எந்த ஒளஷத்தையும் ஏற்றுக்கொள்ளும் வலிமையையும் இழந்து, உடலுக்கு ஆரோக்கியம் தரும் தன்மையையும் அறவே செயல்படாமல் அழிக்கின்றது. இக்காலத்தில்தான் மருத்துவர்கள் கூட நோயாளிகளை கை விட்டு விடுவர்.
இந்த கண்டங்களிளிருந்து விலக்கம் பெற்று மறுவாழ்வு பெற, இறைவனே துணையாகின்றான். இறைவனின் ஆசிர்வாதத்தால் அமிர்த நாடி மேலோங்கி இயக்கம் பெற்று, நச்சு நாடியின் வீரியம் குறைத்து,மூன்று நாடிகளுக்கும் பிராண சக்தியும் கூடுவதால், நோயாளி கொள்ளுகின்ற ஔஷதங்கள் உடலுக்கு ஆரோக்கியத்தைக் கொடுத்து, கண்டங்களிலிருந்து தப்பித்து, நோயாளி மறு வாழ்வு எய்துகிறான்.
உலக மாந்தர்கள் உன்னதமான இறை அருளால், இவ்வகை கொடிய மாரண நோய்களிளிருந்தும், கண்டங்களிலிருந்தும் விலக்கம் பெற்று, ஆரோக்கியம் அடைய சித்தர் பெருமக்கள் தமது பாடல்களில் இம் மந்திரங்களைப் பற்றி விளக்கி உள்ளார்கள்.
இதனை தொகுத்து, வேள்வி முறைப்படி மந்திரம் உச்சாடனம் செய்து, தமக்குரிய அமிர்த நாடி சக்தியைக் கூட்டி, ஆரோக்கியத்துடன் மறுவாழ்வு பெற கோரக்க சித்தர் மிருத்யுஞ்ஜய மந்திரம் என்ற தலைப்பில் ஆதி முதல் அந்தம் வரை தெளிவாக எழுதியுள்ளார். ஈசன் பெருமானால் உமையவளுக்கு அளிக்கப்பட்ட இம்மந்திரம், நந்தீசன் வழியாக சித்தர்கள் மூலம் வெளிவந்த முறைகளையும் விளக்கியுள்ளார். இறுதியில் இறை அருளால் மானிடர்களாகிய நாமும் இவ்வேள்வி புரிந்து, ஆரோக்கியம் பெற, கோரக்க சித்தர் வகுத்தளித்த, மிக எளிமையான, தவறாமல் பலன் அளிக்கக்கூடிய அமிர்த வேள்வி எனப்படும் ஔஷத வேள்வி நமது ஆலயத்தில் மிகவும் செம்மையாக செய்யப்பட்டு வருகின்றது. கடுமையான நோய்களிளிருந்து விடுதலை பெற, நமது ஆலயத்தில் இவ்வேள்வியை செய்து முழுமையான பலன் பெறலாம்.
மேற்கூறிய வேள்வி விவரங்கள் யாவும் அன்னையின் அருள் வாக்கில் வெளிப்பட்டு, விபரங்கள், விதிகள் வகுக்கப்பட்டு, வேள்விகள் முறையாக நமது ஆலயத்தில் நடைபெறுகின்றன.
குறிப்பு: இந்த வேள்வி ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமே செய்யப்படுகிறது. தொடர்பு கொள்ள 044-2246 0820, 2246 2910.