சித்தர்களின் பரிணாமங்கள்

//சித்தர்களின் பரிணாமங்கள்
சித்தர்களின் பரிணாமங்கள்2020-03-05T11:46:30+00:00

சித்தர்களின் பரிணாமங்கள்

நம்முள் பெரும்பாலானோர் அருணை கிரிவலம் செய்திருப்போம். அருணை மலை ஒன்று தான், ஆனால் நாம் கிரி வலம் வரும்பொழுது ஒவ்வொரு கோணத்திலிருந்து அந்த மலையை பார்க்கின்ற பொழுது வெவ்வேறு வடிவங்களாகத் தென்படும். வலம் வருபவர்கள் எந்த திசையில் நின்று மலையை பார்க்கிறார்களோ அந்த உருவமே அண்ணாமலையாக நினைத்து வழிபடுவார்கள். மலை ஒன்று தான் ஆனால் ஒவ்வொரு கோணத்திலும் வடிவங்கள் தான் வேறு.

இந்த மாறுபாடான தோற்றங்களைப் போலத் தான் சித்தர்கள் மீது நாம் கொண்டுள்ள பார்வையும். பிரபஞ்ச சக்தியையே தனக்குள் அடக்கும் வல்லமை கொண்டவர்கள் உலக மக்களுக்குத் தேவையான அனைத்து கலைகளையும் பாடல்களாக அளித்துள்ளனர். இவர்கள் கைதொடாத கலைகளே இல்லை எனலாம். தமக்கு வேண்டிய கலைகளை அறியும் பொருட்டு மக்கள் அந்த கலைகளை எழுதிய சித்தரை ஒரு கோணத்தில் பார்ப்பார்காள். ஆனால் இவர்கள் எழுதிய அனைத்து கலைகளையும் மக்கள் படிக்கின்ற பொழுது தான் சித்தர்களை புரிந்துக்கொள்ள முடியாமல் பல கோணங்களில் பார்பார்கள். மருத்துவராக, மந்திரவாதியாக, ரசவாதியாக, யோக முனிவர்களாக, சித்துக்களை செய்யும் சித்தர்களாக, முழு ஞானமுற்ற சிவனாக, மக்களுக்கு போதனை அளிக்கும் குருவாக என பல கோணங்களில் இவர்களை தரிசிர்ப்பார்காள்.

மிக உயர்ந்த ஞான நிலையில், இவர்கள் பிரம்ம ஒளியை தரிசித்துகொண்டு இருக்கையில், தம்மை மறந்து சமாதி நிலையில், ஏகாந்தமான பேரின்பத்தை அனுபவித்துக்கொண்டு, மகிழ்ச்சியுடன் இருப்பார்கள். இந்த உணர்வுகளை, இந்த சித்த பெருமக்கள் தம் பாடல்களிலே ஞான போதனைகளாக எழுதி இருப்பார்கள்.

அபிராமி அந்தாதி – பாடல் – 16

“கிளியே கிளைஞர் மனத்தே

கிடந்து கிளர்ந்தொளிரும்

ஒளியே ஒளிரும் ஒளிக்கிட

மேஅண்ணில் ஒன்றுமில்லா

வெளியே வெளிமுதல் பூதங்க

ளாகி விரிந்தாம்மே

அளியேன் அறிவள விற்(கு)அள

வான(து) அதிசயமே”

சிவவாக்கியர் – பாடல் 502

“எல்லையற்று நின்றசோதி யேகமா யெரிக்கவே

வல்லபூர ணப்ரகாச யோகபோக மாகியே

நல்லவின்ப மோன சாகரத்திலே யழுத்தியே

நாடொணாத வமிர்தமுண்டு நானழிந்து நின்றநாள்”

முதலில் அபிராமி பட்டர் அவர்கள் உருவமாக வழிபடக்கூடிய அபிராமி அன்னையை தியான நிலையில் அமர்ந்து அவரையே தரிசித்துக்கொண்டு இருக்கும் பொழுது கிளி போன்று அழகிய எழில் நிறைந்த உருவில் தோன்றும் அபிராமி அன்னை மனம் ஆழ்நிலை தியானத்திற்கு செல்ல செல்ல அந்த எழில் உருவம் மறைந்து ஒரு ஒளிச்சுடராக மாறுவதும் அதன் பின்னர் அந்த ஒளி தோன்றக்காரணமான மைய்யம் வெளிப்படுவதும், அதனையும் ஆழ்ந்து கடந்துச்சென்றால் ஒன்றுமே இல்லாத பாழ்வெளியாகவும், அந்த பாழ் வெளிமுழுக்க ஆற்றல்களால் நிறைந்து பஞ்ச பூதங்கள் உருவாவதையும், அதன் ஆதார சக்தியாக ஒரு மூலமே காரணமாக இருப்பதையும் இப்பாடலில் விளக்குகின்றார்.

சிவவாக்கியரும் தம்முடைய பாடலில் எல்லையற்று பூரண பிரகாசமாக ஒளிர்கின்ற, ஜோதியை மௌனமெனும் தியான நிலையில் கண்டு தரிசித்து சாக வரம் அடைந்ததாக கூறுகிறார். எல்ல சித்த பெருமக்களும் உச்ச பட்ச ஞான நிலையில் கடவுளுக்கு உருவம் இல்லையென்றும் அது பரிபூரண ஆற்றல் நிறைந்த ஒளி பிரகாசம் என்றும் கண்டறிந்து கூறியுள்ளனர். இதனால் இவர்கள் அருவ வழுபாடு மட்டுமே சார்ந்து இருப்பதாக அறியாமையால் நினைக்கின்றனர். ஆனால் இவர்களில் பலர் பக்தி பாக்களையும் இயற்றியுள்ளனர்.

சித்தர்கள் தம் குருவாக லிங்கத்தை வழிபடுவார்கள், இவர்கள் நாளும் லிங்க அபிஷேகம் மற்றும் பூஜை செய்யாமல் எந்த பணியையும் தொடங்க மாட்டார்கள். லிங்கம் என்பது மின்சக்தியும் காந்த சக்தியும் குறிக்கும் ஒரு உருவமாகும். நேராக வெளிப்படும் மின்னாற்றலை வட்டமிட்டு சுழன்று கொண்டு இருக்கும் காந்த சக்தியை சேர்த்து,அந்த ஆற்றலை குருவாக பாவித்து தியானிக்கும் பொழுது, அண்ட பிரபஞ்சத்தின் ஆற்றல் முழுக்க அதனுள் இருந்து வெளிப்பட்டு தியானிப்பவர்க்ளை சென்று அடைகிறது. பல 1000 ஆண்டுகாளுக்கு முன்பு மின்னாற்றல் காந்த ஆற்றல் பற்றிய புரிதல் இல்லாத சூழ்நிலையில், தம் ஞானத்தின் மூலம் அறிந்த அதிர்வுகளை ஒரு உருவமாக வழிபட எண்ணி யோக ஞானிகள், இந்த சக்தி வெளிப்படுதலை உருவமாக்கி வழிபட தொடங்கினர்.

தற்காலத்தில் ஃபரடைஸ் விதியின் படி, நேர்க்கோட்டில் செல்லும் மின்சாரத்தை சுற்றி காந்த மண்டலம் உருவாவதையும், அதே சமயம் காந்த மண்டலத்தின் நடுவில் செலுத்தி அசைக்கக்கூடிய உலோகத்தில் மின்னாற்றல் பெருகுவதயும் அந்த விதி விலக்குகிறது. இதன் அடிப்படையில் தான் மின்னாக்கிகள் (generators) உருவாக்க படுகின்றன. இதே மின் மற்றும் காந்த சக்திகள் தான் அனைத்து ஜீவன்களுக்கும் உயிரையும் உணர்வையும் தருகிறது. இந்த உணர்வுகள் செம்மை பட செம்மை பட அறிவும் ஞானமும் மேலோங்குகிறது. இதனால் தான் லிஙமானது மின்சாரம் எனும் நேர்க்கோட்டில், காந்த அலைகள் எனும் வட்டம் சூழ்ந்துள்ளது. இதனை உருவமாக வடிக்கின்ற பொழுது தம் எண்ணம் போல் பல வடிவஙளாக வடித்து வழிபடுகின்றன.

இதனால் தான் சித்தர்கள் லிங்கம் எனும் மின்காந்த ஆற்றலை லிங்கமாக வடித்து, அதனையே தியானித்து, தமக்குறிய ஞான ஆற்றலை அடைகின்றனர்.

ஆகவே எல்ல சித்தர்களும் சிவம் சக்தி எனும் உயிர்–உணர்வு ஆற்றல்களை உருவ வழிபாடு செய்து வந்தனர். இந்த வழிபாட்டின் மூலம் தாம் பெற்ற ஞானத்தினால் பிரபஞ்சம் தோன்றக் காரணமான நாத அதிர்வுகளையும் அப்பொழுது உண்டாகும் ஒலிகளின் ஓசைகளையும் நுட்பமாக கிரகித்து அந்த ஓசைகளையே மந்திரங்களாக தொகுத்து மக்களுக்கு அளித்துள்ளானர்.

சித்திகளை அடைய, இறைவனை அடைய, பிரபஞ்ச ரகசியங்களை அறிய, இந்த மந்திர ஒலிகள் உதவுகின்றன. ஒரு மனிதன் தம்மனதின் வல்லமையினால் தாம் சித்தியடைய வேண்டிய மந்திரங்களை மனம் ஒருமித்து உச்சரித்து வந்தால், அந்த மந்திர ஒலிகளின் அதிர்வுகள் பெருகி அவனுள் இயங்கத்துடங்கி, பின்னர் அவன் நினைத்த காரியத்தில் சித்தியடைய செய்கிறது.

சித்தர்கள் இந்த ஒலி அதிர்வுகளை நுட்பமாக கிரகித்து ஞானம் பெரும்பொருட்டு தியானிக்கும் பொழுது உச்சரிக்கபடவேண்டிய பல மந்திரங்களை, மந்திரக்கலைகளாக நமக்கு பாடல்களாக எழுதி அளித்துள்ளனர். அதனால் இவர்கள் மந்திர உபாசனை மட்டுமே செய்து இறைவனை அடைந்ததாகவும் எண்ணுவர். ஆனால் இவர்கள் முழு பிரபஞ்ச ஆற்றல்களையும், மந்திர ஒலிகளையும் தெளிவாக உணர்ந்தவர்கள்.

எல்ல உயிர்களின் உடலும் புறத்தே உள்ள சீதோஷ்ண நிலைகளுக்கு ஏற்ப, உண்ணும் உணவிற்கு ஏற்ப, இருக்கும் இருப்பிடத்திற்கு ஏற்ப, ஆரோக்கியமும் நோய்களும் அடைகின்றன. அண்டத்தில் உள்ள ஆற்றலின் விகிதங்கள் உடலென்னும் பிண்டத்தில் மாறுபடுகின்ற பொழுது, உடல் சம நிலையற்று உறுப்புகளின் செயல்கள் மாறுபட்டு நோய்களுக்கு உள்ளாகின்றன.  இந்த அண்ட-பிண்ட ஆற்றல்களின் ஒற்றுமைகளை உணர்ந்த சித்தர்கள், உடல் எப்பொழுதும் ஆரோக்கியமாக இருக்கும் பொருட்டு, நோய்கள் தோன்ற காரணமான ஆற்றலின் குறைபாடுகளை கண்டுணர்ந்து அந்த ஆற்றலை ஈடுகட்டும் பொருட்டு, அந்த ஆற்றலை தரக்கூடிய மூலிகைகள், பஸ்பங்கள், செந்தூரங்கள், லேகியங்கள் போன்ற பலவற்றை கண்டறிந்து நமக்கு விளக்கியுள்ளனர். இந்த குறைப்பாடுகளை அறிய அண்டத்தில் இருந்து நாம் பெரும் ஆற்றல்காளை உணர – வாத, பித்த, சிலேத்துமம் எனும் நாடிகளை கண்டறிந்து, மருந்துகளை அளிக்கும் முறையும், உடல் என்றும் ஆரோக்கியமாக இருக்க காய சித்தி மருந்துகளையும், கண்டறிந்து அந்த மருந்துகளை தயாரித்து பயன்படுத்தும் வழி முறைகளையும் விளக்கியுள்ளனர். இதனால் சித்தர்களை மருத்துவர்கள் எனும் கோணத்தில் மட்டும் பார்பவர்களும் உண்டு.

அடுத்தாக இந்த சித்த புருஷர்கள் தாங்கள் காய சித்தி, யோக சித்தி, ஞான சித்தி போன்ற வற்றை ஒருங்கே பெரும் பொருட்டு, பாதரசத்தை மணிப்போல் கட்டி, அதற்கு பல வித சக்திகளை ஊட்டி, பல்வேறு விதமான குளிகை மணிகளை தயாரிப்பர். ஊட்டப்படும் சக்திகு ஏற்றார்ப்போல் அந்த மணிகள் மனித ஆற்றலின் எல்லைக்கு அப்பால், கற்பனைக்கூட செய்ய முடியாத அளவிற்கு, பல அற்புதங்களை நிகழ்த்தும். அந்த அற்புதங்களை நிகழ்த்த, எந்த-எந்த வகை மணிகளை, எந்த-எந்த வகையில் பயன்படுத்தினால் என்ன-என்ன அற்புதங்கள் நிகழும் என்றும் தம்முடைய சீடர்களுக்கு உபதேசமாக அளித்துள்ளனர். இது சீடர் பரம்பரை வழியாக தொடர்ந்து விளக்கப்பட்டு வருகிறது. சில சித்தர்கள், தவறானவர்கள் இதனை புரிந்து கொள்ளாவண்ணம் பரிபாஷை எனும் குறிப்பு பாஷையின் மூலம் இதனை பாடல்களாக எழுதியுள்ளனர். ஏனெனில், இந்த குளிகை மணிகளை கொண்டு உலோகங்களை தங்கமாக்கும் வகைகளையும் குறிப்பிட்டு உள்ளனர். சித்தர்கள் உலோகங்களை தங்கமாக்கி பொருளை பெருக்கிக்கொள்ள நினைக்கவில்லை, அந்த தங்கத்தைக்கொண்டு பஸ்பங்களை தயாரித்து ஏழை-எளிய மக்களுக்களின் நோய்களை நீக்க மருந்துகளை தயாரித்து அளித்தனர். உன்மையில், தங்கம் வாங்க வேண்டும் என்றால், ஏராளமான பொருள் செலவு ஆகும் என்பதனால், இவர்கள் எளிய முறையில், செலவின்றி தங்கம் தயாரித்து பஸ்பம் ஆக்கினர். அதனை நோயாளிகளுக்கு கொடுத்து உதவினர். ஆகவே மக்களில் பலர், சித்தர்களை ரசவாதிகள் என்றும் கருதினர்.

ஆனால் உன்மைய்ல், சித்தர் பெருமக்கள் இந்த உலகில் மக்களோடு மக்களாக நம்மிடையே வாழ்ந்துக்கொண்டு நமக்கு வேண்டியதை தேர்ந்தெடுத்து அதனை மக்களுக்கு கொடுத்து நம்மை உயர் நிலைக்கும் உயர்த்த இறைமார்கத்தை போதித்து, பக்தியும் ஒழுக்கமும் பண்பும் நிறைந்த கலாச்சாரமிக்க சமூதாயத்தை நிலை நாட்டவே பாடுபட்டனர். இவர்கள் விளக்காத கலைகளே இல்லை எனலாம்.

ஆகவே சித்தர்களை உருவ வழிபாடுகளை மறுப்பது போலவோ, அருவ வழிபாட்டை நமக்கு திணிப்பது போலவோ கருதுதல் கூடாது. இவர்கள் உருவ வழிபாட்டையும் செய்தவர்கள், அருவ வழிபாட்டையும் அறிந்தவர்கள். உலக மக்கள் அனைவரும், அன்புடனும் அமைதியுடனும், மன நிறைவுடனும், என்றும் வாழ வேண்டும் என்று பொது நலனையே விரும்பி ஈசனை வழிபடுபவர்கள். உலகில், இந்த வழிபாடுகள் தளர்ந்து பொருளற்ற வழிபாடுகள் பெருகுகின்ற காலத்தில் மக்களிடையே மன பேதமும் வழிபாடு பேதங்களும், மேலோங்குகின்ற காலத்திலும், இந்த சித்த பெருமக்கள், அருவமாக நின்றோ, உருவமாக தோன்றியோ, உயரிய சித்த கலாசாரத்தை அழிபடா வண்ணம் எதிர்வினை செயலாக்கி உண்மையை நிலை நிறுத்துவார்கள்.

அவ்வாறு கேடான சூழ்நிலை ஏற்படும் பொழுது, சித்தர்கள் இந்த உலகையும், நமது உயரிய கலாச்சாரத்தையும் காத்தருள்வார்கள் என்று அவர்கள் அடி தொழுவோம். சித்தர்களின் ஆரி பெறுவோம்.

ௐ பதினெண் சித்த குருமார்கள் திருவடி போற்றி.

18 சித்தர்கள்

வரவிருக்கும் நிகழ்வுகள்

Ankila varudappirappu

ஜனவரி 1, 2026

Ankila varudappirappu

ஜனவரி 1, 2027

Subscribe To Newsletter

* indicates required

News Archives

    வரவிருக்கும் நிகழ்வுகள்

    Ankila varudappirappu

    ஜனவரி 1, 2026

    Ankila varudappirappu

    ஜனவரி 1, 2027