கோவிலில் தினசரி பூஜைகள்
அன்னை அருள்வாக்கில் கூறியவாறு தினசரி கீழ்க்காணும் பூஜைகள், அபிஷேகங்கள் நமது ஆலயத்தில் நடைபெற்று வருகிறது. பக்தர்கள் தங்களின் விருப்பத்திற்கேற்ப இந்த பூஜைகளில் கலந்துக்கொண்டும், அதற்கான கட்டணங்களை செலுத்தியும் பயன் பெறலாம்.
- அபிஷேகங்கள்
- சந்தனக்காப்பு
- வெள்ளிக்கவசம்
- குங்குமக்காப்பு
அபிஷேகம்
அபிஷேகங்கள் தெய்வங்களை குளிரவைத்து நமது கஷ்டங்களை அகற்றி, வேண்டுதல்களை நிறைவேற்றும்.
அபிஷேகங்கள் அன்னை, மந்திரப்பாவை மற்றும் விநாயகருக்கு தினசரி நடைப்பெறும். மேலும், சிறப்பு அபிஷேகங்கள் குறிப்பிட்ட காலங்களில் சித்தாகம விதியின் படி நடைபெற்று வருகிறது.
குறிப்பாக மந்திரப்பாவைக்கு ராகு காலங்களில் செவ்வாய்கிழமை (3-4:30), வெள்ளிக்கிழமை (10:30 – 12:00), ஞாயிற்றுக்கிழமைகளில் (4:30-6:00) நடைப்பெரும்.
இந்த வலைபக்கத்தில் அபிஷேகங்களுக்கான கட்டணத்தை இணையதளத்தின் மூலம் செலுத்தி பலன் அடையலாம்.
சந்தனக்காப்பு (Sandal Paste Worship)
சந்தனக்காப்பு சேவை புரிவோருக்கு கர்ம வினைகள் தீர்ந்து நற்பலன்கள் கூடும். சந்தன காப்பு புரிவோருக்கு அன்னைக்கு காப்பு இட்ட சந்தனம் பிரசாதமாக அளிக்கப்படும்.
இந்த வலைப்பக்கத்தின் மூலம் நீங்கள் சந்தனக்காப்பிற்கான தொகையை செலுத்தி பயன் பெறலாம்.
குறிப்பு: அன்னைக்கு வெள்ளிக்கிழமைகளிலும், மந்திரப்பாவைக்கு சனிக்கிழமைகளிலும் சந்தனக்காப்பு நடைப்பெறும்.
வெள்ளிக்கவசம் (Silver Shield Worship)
நமது ஆலயத்தில் விநாயகர், அன்னை மற்றும் மந்திரப்பாவைக்கு வெள்ளிக்கவசங்கள் சிறப்பு நாட்களில் அணிவித்து வருகிறோம்.
உங்கள் விருப்பத்திற்கேற்ப நீங்கள் உங்கள் பிறந்த நாள், மண நாள் அல்லது உங்கள் இல்ல விழாநாட்களில் நமது ஆலயத்தில் வெள்ளிக்காப்பு அணிவித்து இறை அருள் பெறலாம். இந்த வலைப்பக்கதின் மூலம் நீங்கள் வெள்ளிக்கவசம் சேவைக்கான தொகையை இணையம் மூலம் செலுத்தி பயன் பெறலாம்.
குங்குமக்காப்பு
குங்குமக்காப்பு அன்னை ஆதிபராசக்திக்கு புதன் தோறும் நடைப்பெற்று வருகிறது. குங்குமம் மங்களகரமான பொருள் என்பதால் இந்த சேவையின் மூலம் அன்னையின் அருள் பெற விரும்புவோரின் இல்லங்களில் சகல மங்களங்களும் வந்துசேரும்.
இந்த வலைப்பக்கதின் மூலம் நீங்கள் குங்குமக்கவசம் சேவைக்கான தொகையை இணையம் மூலம் செலுத்தி பயன் பெறலாம்.