அன்னை ஆதிபராசக்தி
தம்முடைய குறைகள் நீங்க வேண்டியும், செல்வ வளங்கள் பெற வேண்டியும், தம்முடைய பணிகளில் சிறந்து விளங்கவேண்டியும், எதிரிகளின் தொல்லைகளில் இருந்து விடுபட வேண்டியும், பக்தர்கள் பெரும்பாலும் ஆலயம் செல்கின்றனர்.
நமது ஆலயத்தில் அன்னையின் கருவறையில் ஓங்கார சக்தியாக அன்னை பராசக்தியும், யோக சக்தியாக அன்னை ஆதிசக்தியும், ஒருசேர வீற்றிருக்கிறார்கள்.
அன்னையை நாடிவரும் அன்பர்கள், தங்களுக்குரிய பிரச்சனைகள், குறைகள், கஷ்டங்கள், அனைத்தும் விலக வேண்டி, அன்னைக்காக 1 நெய் விளக்கும், நவகிரகங்களுக்காக 9 நெய் விளக்குகளும், அகண்ட தீபத்தில் (அணையா விளக்கு) இருந்து ஏற்றி, விளக்கு மாடத்தில் வைத்துவிட்டு,அன்னையை 9 முறை வலம் வந்து (வலம் வரும்பொழுது ஒவ்வொரு சுற்றின் போதும் ஒவ்வொரு கிரகத்தைப் பார்த்து வேண்டிக் கொள்ள வேண்டும்.)அன்னையின் முன் அமர்ந்து, அன்னை அருளிய, அர்ச்சனை மலர்களை 3 முறை
படித்து தங்களுடைய கஷ்டங்கள் தீர வேண்டி, மானசீகமாக பக்தியுடன் வழிபட்டு, பிரார்த்தனை செய்து கொள்வதால் அன்னையின் கட்டளைக்கு அடி பணிந்து, மகா மண்டபத்தில் கொலுவிருக்கும் நவகோள்கள் வேண்டுவோருக்குரிய கிரக தொல்லைகளை நீக்குவதுடன், அவர்களுக்கு அந்த கிரகங்கள் நற்பலன்களையும் கொடுப்பதால், அவர்களுக்குரிய பிரச்சனைகள் எளிதில், விரைவில் தீரும். பலன்கள் உடனே கூடும். நவ கோள்களின் ஆசீர்வாதங்களும் தீர்க்கமாக பெற்று, துயரில்லாத நல்ல பலனை அடையலாம்.
ஆதிபராசக்தி மண்டபம்
இக் கருவறையின் முன் உள்ள மகாமண்டபத்தில் அன்னைக்குரிய, காப்பு சக்திகளாக சப்த கன்னியர்கள் (பிரம்மஹி , மகேஷ்வரி, கௌமாரி, நாராயணி, வராஹி, மகேந்திரி, சாமுண்டி) மற்றும் நவகிரகங்கள் தங்கள் துணையாளுடன், அவர்களுக்குரிய வாகனங்களில், அன்னை வகுத்தளித்தப்படி ஸ்தாபிதம் செய்யப்பட்டு அருளாட்சி செய்து வருகிறார்கள்.
ஆதிபராசக்தி வழிபாடு
அன்னையை நாடிவரும் அன்பர்கள், தங்களுக்குரிய பிரச்சனைகள், குறைகள், கஷ்டங்கள், அனைத்தும் விலக வேண்டி, அன்னைக்காக 1 நெய் விளக்கும், நவகிரகங்களுக்காக 9 நெய் விளக்குகளும், அகண்ட தீபத்தில் (அணையா விளக்கு) இருந்து ஏற்றி, விளக்கு மாடத்தில் வைத்துவிட்டு, அன்னையை 9 முறை வலம் வந்து (வலம் வரும்பொழுது ஒவ்வொரு சுற்றின் போதும் ஒவ்வொரு கிரகத்தைப் பார்த்து வேண்டிக் கொள்ள வேண்டும்.) அன்னையின் முன் அமர்ந்து, அன்னை அருளிய, அர்ச்சனை மலர்களை 3 முறை படித்து தங்களுடைய கஷ்டங்கள் தீர வேண்டி, மானசீகமாக பக்தியுடன் வழிபட்டு, பிரார்த்தனை செய்து கொள்வதால் அன்னையின் கட்டளைக்கு அடி பணிந்து, மகா மண்டபத்தில் கொலுவிருக்கும் நவகோள்கள் வேண்டுவோருக்குரிய கிரக தொல்லைகளை நீக்குவதுடன், அவர்களுக்கு அந்த கிரகங்கள் நற்பலன்களையும் கொடுப்பதால், அவர்களுக்குரிய பிரச்சனைகள் எளிதில், விரைவில் தீரும். பலன்கள் உடனே கூடும். நவ கோள்களின் ஆசீர்வாதங்களும் தீர்க்கமாக பெற்று, துயரில்லாத நல்ல பலனை அடையலாம்.
வழிபாட்டின் பிற முறைகள்
பக்தர்கள் பின்வரும் எந்தவொரு முறையிலும் அன்னாயை வணங்கி அவரது ஆசீர்வாதங்களைப் பெறலாம்:
- அபிஷேகங்கள்
- சிறப்பு அபிஷேகம் ( ஒருவருக்கு அருள் வாக்கு பெற உதவுகிறது)
- சந்தனக்காப்பு
- குங்கும காப்பு
- வெள்ளிக்கவசம்