ஞானதேவி

ஞானதேவி2020-03-05T11:41:59+00:00

ஞானதேவி

நமது ஆலயத்தில் அமர்ந்திருக்கும் அழகிய, அமைதியான தியான மண்டபம், சித்தாகம விதிப்படி, வாஸ்து முறைப்படி, அன்னையால் வகுக்கப்பட்ட அதே அளவு முறைகளில், முறையாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இந்த தியான மண்டபத்தின் மையத்தில் அனைத்து கலைகளுக்கும் அதிதேவதையான, ஞானத்தை அளிக்கக்கூடிய ஞான தேவி அழகிய கோலத்துடன் அமர்ந்து ஆசி புரிகிறாள்.

ஓவ்வொருவரும் ஒவ்வொரு கலைகளில், துறைகளில், பணியாற்றிக்கொண்டே, வேறு சில கலைகளிலும் பொழுது போக்காக ஈடுபட்டு காலம் கழித்துக் கொண்டே இருக்கிறோம். ஆனாலும் தம் பணிகளில் ஒருசிலரே உன்னதமாக முதன்மையாக பிரகாசித்து கொண்டிருக்கின்றனர். எல்லோரும் முதல் நிலை அடையவில்லை. ஞான தேவியின் அருளும், ஆசியும், இருப்பின் அந்தந்த கலைகளில் நுட்பமான வழிகளும், விதிகளும், எளிதில் விளங்கும். அவ்வகையில் மனமொன்றி ஆன்ம லயத்தோடு ஈடுபாட்டுடன் செயல்படுவதின் மூலம், மிக உன்னத, உயரிய நிலையைப் பெற்று பிரகாசிக்கலாம்.

கல்விஞானமும், நிறைவான ஞாபக சக்தியும், நல் ஒழுக்க சிந்தனைகளும், எதிர்கால உயரிய வாழ்விற்கு வழி அமைத்துத் தரும் தேவியாக இந்த ஞான தேவி விளங்குவதால் கல்வி பயிலும் மாணாக்கர்களுக்கும்,நல்ல உறுதுணையாக விளங்குகிறார். இவரின் ஆசி பெறுவதற்கு காலை 10 மணிக்குள்ளும், மாலை 5 மணிக்கு மேலும், தியான மண்டபம் வந்து, சுத்தமான துண்டு அல்லது தர்பை பாய் விரித்து, அதன் மேல் பத்மாசனம் அல்லது சாதாரணமாக சுகாசனத்தில், முதுகும், கழுத்தும் வளையாமல் நேராக அமர்ந்து 20 நிமிடம் தமக்குரிய கலையை வேண்டி தியானிக்க வேண்டும்.

இவ்வாறு தொடர்ந்து தியானிப்பதின் மூலம் எல்லா வித்தைகளும் எளிதாக, உள் மனதில் தோன்றி, திறமைகள் வெளிப்படும். இல்வாழ்விலும், பொது வாழ்விலும், மிகச்சிறப்பான தகுதி பெற்று பிரகாசமாக வாழலாம்.

அருள்ஞானம் வேண்டுவோருக்கும் ஞானதேவியின் அருளால் பல யோக நிலைகளும், சாஸ்திரங்களும், ஞானமும், மந்திரங்களும், யோக நிலையில், உள் ஞான ஒளிர்வில் உதிக்கக் காணலாம். இவர்களின் மிக உன்னதமான ஆன்மீக சாதனைகள் பழகி, மிக உயரிய நிலைகளை அடையலாம்.

ஞானதேவி வழிபாடு

இவரின் ஆசி பெறுவதற்கு காலை 10 மணிக்குள்ளும், மாலை 5 மணிக்கு மேலும், தியான மண்டபம் வந்து, சுத்தமான துண்டு அல்லது தர்பை பாய் விரித்து, அதன் மேல் பத்மாசனம் அல்லது சாதாரணமாக சுகாசனத்தில், முதுகும், கழுத்தும் வளையாமல் நேராக அமர்ந்து 20 நிமிடம் தமக்குரிய கலையை வேண்டி தியானிக்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து தியானிப்பதின் மூலம் எல்லா வித்தைகளும் எளிதாக, உள் மனதில் தோன்றி, திறமைகள் வெளிப்படும். இல்வாழ்விலும், பொது வாழ்விலும், மிகச்சிறப்பான தகுதி பெற்று பிரகாசமாக வாழலாம்.
அருள்ஞானம் வேண்டுவோருக்கும் ஞானதேவியின் அருளால் பல யோக நிலைகளும், சாஸ்திரங்களும், ஞானமும், மந்திரங்களும், யோக நிலையில், உள் ஞான ஒளிர்வில் உதிக்கக் காணலாம். இவர்களின் மிக உன்னதமான ஆன்மீக சாதனைகள் பழகி, மிக உயரிய நிலைகளை அடையலாம்.

கோயில் சன்னதிகள்

வரவிருக்கும் நிகழ்வுகள்

Amaavaasai

மே 7

Pournami

மே 23

Subscribe To Newsletter

* indicates required

News Archives

    வரவிருக்கும் நிகழ்வுகள்

    Amaavaasai

    மே 7

    Pournami

    மே 23