குருமஹேஸ்வரர்
சித்த குருமார்கள் மந்திரப்பாவையை காப்பு சக்தியாகவும், குரு மகேஷ்வரரை தங்களது குருவாகவும் பாவித்து வழிபட்டு வருகிறார்கள். இந்த சன்னதி நமது ஆலயத்தில் வாக்கு மண்டபத்திற்குள் அமைந்துள்ளது.
இந்த ஆலயத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் 18 சித்தர்கள், தினம் பிரம்ம முஹூர்த்தத்தின் பொழுது குரு மகேஷ்வரரை வழிபட்டுவிட்டு தங்களின் யோக நிலைக்கு செல்வதாக நம்பிக்கை.
பௌர்ணமி இரவுகளில் ஆலயத்தில் தங்கி வழிபடும் பக்தர்கள் குரு மகேஷ்வரரின் சன்னதியில் சித்த குருமார்கள் வழிபடும் திவ்ய காட்சிகளை கண்டதாக பல முறை சொல்லிக்கேட்டு இருக்கின்றோம்.
இந்த சக்திவாய்ந்த குரு மகேஷ்வரரை தரிசித்து வழிபடும் பக்தர்களுக்கு ஞானம் மேலோங்கி, சித்தக்கலைகளில் தேர்ச்சியும் கிட்டும் என்பது நம்பிக்கை.
வாங்க, குரு மகேஷ்வரரை தரிசனம் செய்வோம்.