மந்திரப்பாவை

மந்திரப்பாவை2021-01-19T06:45:04+00:00

அன்னை மந்திரப்பாவை

மந்திரங்கள், மற்றும் அதைச்சார்ந்த பல விதமான தொல்லைகள், கர்ம வினைகள், இடையறாது எதிரிகளால் ஏற்படும் கஷ்டங்கள், தடைகள், இவைகளில் இருந்து விடுதலை பெற்று, மனநிம்மதியான, அமைதியான, ஆரேக்கியமான, சாந்தமான,மகிழ்வான வாழ்க்கை வாழ இந்த மந்திரப்பாவையை வணங்குங்கள். அவர்களுடைய அருள் ஆசியால் நலங்கள் பெற்று, எந்நாளும் இன்புற்று வாழலாம்.

பாவையின் எதிரில் இருபுறமும் பதிணெண் சித்தகுருமார்கள்(அகத்தியர், கருவூரார், தேரையர், இடைக்காடர், அழுகண்ணர், சட்டைமுனி, புலஸ்தியர், போகர், காளாங்கிநாதர், சிவவாக்கியர், மச்சமுனிநாதர், புலிப்பாணி, திருமூலர், கொங்கணவர், இராமதேவர், பாம்பாட்டிசித்தர், பிண்ணாக்கீசர், கமலமுனி) அருள்வடிவில் அழகாக காட்சி அளிக்கிறார்கள்.

எங்களுக்கு தெரிந்தவரை அன்னை மந்திரப்பாவைக்கு பள்ளிக்கரணை சக்தி ஆலயத்தைத்தவிர வேறு எங்கும் சன்னதி கிடையாது. அன்னை மந்திரப்பாவை சித்தர்களுக்கெல்லாம் குருவாகவும், காப்பு தாயாகவும் விளங்கும் சக்தி. இந்தப்பதிவில் நாம் அன்னை மந்திரப்பாவையின் தோற்றத்தைப்பற்றி காணலாம். ஒரு சுவாரசிய கதையை போல் அமைந்து இருக்கும் இந்த பதிவில் வரும் நிகழ்ச்சி, வர்ணனை மற்றும் பாத்திரங்கள் அனைத்தும், பல சித்தர் பாடல்களில் இருந்து நமக்கு கிடைக்கும் குறிப்புகளின் தொகுப்பு. மேலே படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் மந்திரப்பாவை தோற்றம்

மந்திரப்பாவை கருவறை மற்றும் மண்டபம்

மந்திரப்பாவையின் மகா மண்டபத்தில் சகல சௌபாக்கியங்களும் தரவல்ல, 16வகை செல்வங்களையும் அளிக்கும் தாயாகிய மகாலட்சுமி, தெய்வீக பொலிவுடன் அமர்ந்து ஆசி புரிகிறாள். இவரைப் பணிவதின் மூலம் மங்களகரமான வாழ்க்கை, சந்தான பாக்கியம், வளம் கொழிக்கும் தொழில் முன்னேற்றம் கூடுவதுடன், மாங்கல்ய தோஷங்களும், மாரண தோஷங்களும் விலகி, ஆரோக்கியமுடன் வாழலாம். இவளுடைய அருளையும், ஆசியையும் பெறுவதற்காக, பக்தர்கள் வெள்ளியன்று புதிய நல்ல பட்டுப்புடவை மற்றும் மலர்மாலைகள் சாற்றி, இனிப்பு, பழங்கள் படைத்து, விளக்கேற்றி, தங்கள் குறைகள் நீங்க பிரார்த்தனை செய்து அன்னை அருளிய திருமகள் போற்றிகள் சொல்லி, வழிபாடுகள் செய்து, பலன் பெறுகிறார்கள்.
நமது ஆலயத்தில் மந்திரப்பாவை அம்மன் கருவறை எதிரில் உள்ள மகாமண்டபத்தில், அறுபடை வீடுகளின் மூலவர் மற்றும் அந்தப் படைவீடுகளுக்கான சுதை வேலைப்பாடுகள் செய்து, அழகிய வண்ணங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது. மற்றும் நிறை ஞானிகளான சுவாமி விவேகானந்தர், இராமகிருஷ்ண பரமஹம்ஸர், மகான் இரமண மகரிஷி, அருட்பிரகாச வள்ளலார் ஆகியோரின் நடுநாயகமாக மோன, யோக, சித்தி நிலையில் சனகாதி முனிவர்களுக்கு அருள் உபதேசம் அளிக்கும் கோலத்தில், குரு தட்சிணாமூர்த்தி கல்லால மரத்தின் கீழ் வீற்றிருக்கிறார்.

மந்திரப்பாவை வழிபாடு

பக்தர்கள் கீழ்க்காணும் வழிபாட்டு முறைகளை கடைப்பிடித்து அன்னை மந்திரப்பாவையின் திருவருளை பெறலாம்.

மேலும் அன்னை மந்திரப்பாவையை தரிசிக்க வரும் பக்தர்கள், அன்னைக்கு ஒரு நெய் தீபமும், 18-சித்த குருமார்களுக்கு பதின்னெட்டு நெய் தீபங்களும் ஏற்றி, மந்திரப்பாவை போற்றிகளை 3 முறை அன்னையின் திருமுன்னர் அமர்ந்து கூறி வழிபட, தங்கள் குறைகள் மற்றும் கஷ்டங்கள் நீங்கப்பேற்று வாழ்வில் அனைத்து வளங்களையும் அடைவார்கள்.

மந்திரப்பாவை மந்திரங்கள்(போற்றிகள்)

மந்திரங்கள் பதிவிறக்கம்

மந்திரங்களைக் கேளுங்கள்

மந்திரப்பாவை காணொலிகள்

கோயில் சன்னதிகள்

வரவிருக்கும் நிகழ்வுகள்

Pournami

டிசம்பர் 15

Sankatahara Chathurthi

டிசம்பர் 18

Pradosham Abhishegam

டிசம்பர் 28

Amaavaasai

டிசம்பர் 30

Ankila varudappirappu

ஜனவரி 1, 2025

Subscribe To Newsletter

* indicates required