அன்னை மஹாலக்ஷ்மி
மந்திரப்பாவையின் மகா மண்டபத்தில் சகல சௌபாக்கியங்களும் தரவல்ல, 16வகை செல்வங்களையும் அளிக்கும் தாயாகிய மகாலட்சுமி, தெய்வீக பொலிவுடன் அமர்ந்து ஆசி புரிகிறாள். இவரைப் பணிவதின் மூலம் மங்களகரமான வாழ்க்கை, சந்தான பாக்கியம், வளம் கொழிக்கும் தொழில் முன்னேற்றம் கூடுவதுடன், மாங்கல்ய தோஷங்களும், மாரண தோஷங்களும் விலகி, ஆரோக்கியமுடன் வாழலாம். இவளுடைய அருளையும், ஆசியையும் பெறுவதற்காக, பக்தர்கள் வெள்ளியன்று புதிய நல்ல பட்டுப்புடவை மற்றும் மலர்மாலைகள் சாற்றி, இனிப்பு, பழங்கள் படைத்து, விளக்கேற்றி, தங்கள் குறைகள் நீங்க பிரார்த்தனை செய்து அன்னை அருளிய திருமகள் போற்றிகள் சொல்லி, வழிபாடுகள் செய்து, பலன் பெறுகிறார்கள்.
நமது ஆலயத்தில் மந்திரப்பாவை அம்மன் கருவறை எதிரில் உள்ள மகாமண்டபத்தில், அறுபடை வீடுகளின் மூலவர் மற்றும் அந்தப் படைவீடுகளுக்கான சுதை வேலைப்பாடுகள் செய்து, அழகிய வண்ணங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது. மற்றும் நிறை ஞானிகளான சுவாமி விவேகானந்தர், இராமகிருஷ்ண பரமஹம்ஸர், மகான் இரமண மகரிஷி , அருட்பிரகாச வள்ளலார் ஆகியோரின் நடுநாயகமாக மோன, யோக, சித்தி நிலையில் சனகாதி முனிவர்களுக்கு அருள் உபதேசம் அளிக்கும் கோலத்தில், குரு தட்சிணாமூர்த்தி கல்லால மரத்தின் கீழ் வீற்றிருக்கிறார்.
மகாலட்சுமி வழிபாடு
இவ்வழிபாட்டில் கலந்து கொள்ள விருப்பமுள்ள அன்பர்கள், ஒரு வெள்ளிக்கிழமை அன்று மகாலட்சுமிக்கு தரம் வாய்ந்த பட்டுப்புடவை, வாசனைமிக்க மலர்மாலை சாற்றி, 3 வகை இனிப்பு, 3 வகை பழங்கள் மற்றும் அர்ச்சனை பொருட்களை வாழை இலையில் படையல் இட்டு, விளக்கேற்றி, விநாயகர் போற்றி 1 முறை, திருமகள் போற்றி 6 முறை படித்து, பின்னர் மனமார வேண்டி, கற்பூரம் காட்டி வழிபாட்டினை முடிக்க வேண்டும்.
இவ்வழிபாட்டில் கலந்து கொள்வதின் மூலம் மாங்கல்ய தோஷமூம் நீங்கி, மாங்கல்ய பலமும், பூரண அருளும் பெற்று நலமோடு வாழலாம்.
இதற்கான கட்டணம் ஏதும் இல்லை.