வினைத்தீர்த்த விநாயகர்
வினைத்தீர்த்த விநாயகர் சன்னதியின் கும்பாபிஷேகம் 1989ஆம் ஆண்டு செய்யப்பட்டது.
விநாயகர் முழு முதற்கடவுள் என்பதற்கு பொருந்தும் வகையில், ஆலய முகப்பின் அருகாமையிலேயே இச்சன்னதி அமைந்துள்ளது. பக்தர்கள் வினைத்தீர்த்த விநாயகரை தரிசித்தப்பிறகே மற்ற சன்னதிகளை அடையும்வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது.
மேற்கு நோக்கி இருக்கும் இந்த சன்னிதானம், வினைத்தீர்த்த விநாயகரை சரணடைந்தோரின் பாவங்களை முற்றிலும் அழித்துவிடும் என்பது இங்கு வரும் பக்தர்களின் அசைக்கமுடியா நம்பிக்கை.
வினைத்தீர்த்த விநாயகர் வழிபாடு
பக்தர்கள் கீழ்க்காணும் வழிபாட்டு முறைகளை கடைப்பிடித்து விநாயக பெருமானின் திருவருளை பெறலாம்:
தேய்பிறை சதுர்த்தி தினங்களை சங்கடஹர சதுர்த்தி என அழைக்கப்படுவது அனைவரும் அறிந்ததே. குறிப்பாக இது விநாயகப்பெருமானுக்கு மிகவும் உகந்த நாள் என்பதால், நமது ஆலயத்தில் வினைத்தீர்த்த விநாயகருக்கு சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டு, பின்னர் பிரசாதம் வழங்கப்படுகிறது.