இடைக்காடர்
இவரை தரிசிப்பது மிக கடினம். அதீதமான பிராண ஆற்றலை வெளிப்படுத்துபவர். அடர்ந்த காடுகளுக்கு இடையே யோகம் புரிபவர். இவரை வணங்குவதால் சனி தோஷங்களான, அதாவது கண்ட சனி, ஜென்ம சனி, ஏழரை சனி, அஷ்டம சனி, அர்த்தாஷ்டம சனி போன்ற அனைத்து சனி தோஷங்களும் விலகி நற்பலம் கிடைக்கும். மற்றும், மக்களால் உயர்வாக மதிக்கப்படும், உயர்வை தருபவர். மேலும், பெரும் தொழில்கள் புரியும் ஆற்றல் பெறவும், இவரின் ஆசியால் எளிதில் கைக்கூடும்.
இடைக்காடர் வழிபாடு
நமது ஆலயத்தில் யோகம் புரியும் பதினெண் சித்தர்களை வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள். தம் வேண்டுதல்கள் நிறைவேற சனி கிழமைகளில் தொடர்ந்து 12 முதல் 18 வாரங்கள் வழிபட்டு வந்தால் அவரின் ஆசி கூடும்.
வழிபடும் முன்னர் 5 நெய் விளக்குகள் ஏற்றி வைத்து ஆலயம் வலம் வந்து பின்னர் சித்தர் முன்னிலையில் ஒரு தூய்மையான துண்டு அல்லது சிறிய பாய் விரித்து, அமர்ந்து சித்தர் போற்றிகள் கூறி முடித்து 10 நிமிடம் குறிப்பிட்ட சித்தரை மனதில் தியானித்து வேண்டுதல் கூறி முடிக்க வேண்டும். அந்நாளில் மந்திரப்பாவைக்கு அர்ச்சனை செய்வது நல்லது.
வழிபடும் காலத்தில் இடையில் வரும் பௌர்ணமி அன்று சித்தர்களுக்கு மலர்மாலை சாற்றி வந்து வழிபாடு செய்தால் நல்ல பலன் தரும்.
வழிபாடு காலம் முடிந்த பின்னர் நமது கோரிக்கைகள் குருமார்களின் ஆசியால் தடைகள் நீங்கி பலன் கூடத் தொடங்கும், பின்னர் அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் ஆலயம் வந்து வழிபட்டால் முழு பலன் உடனே கை கூடும்.
இடைக்காடர் வழிபாட்டின் நன்மைகள்
தம் வேண்டுதல்கள் நிறைவேற சனி கிழமைகளில் தொடர்ந்து 12 முதல் 18 வாரங்கள் வழிபட்டு வந்தால் இடைக்காடர் ஆசி கூடும்.
சனி பகவானால் ஏற்படும் அனைத்து தோஷங்கள் விலகவும், மக்களால் உயர்வாக மதிக்கப்படவும், பெரும் தொழில்கள் புரியும் ஆற்றல் பெறவும் இவரின் ஆசியால் எளிதில் கைகூடும்.
இடைக்காடர் போற்றி
அடர் காட்டிடை அமர்ந்து யோக தவம் புரியும் இடைகாட்டு சித்தரே போற்றி
சுடர் ஒளி தேவி பலத்தால் கோள்வினை தகர்த்து காட்டிய இடைகாட்டு சித்தரே போற்றி
தொடர் மரண பிணி வகைகளுக்கும் கல்ப மருந்துகள் கண்ட இடைகாட்டு சித்தரே போற்றி
கடல் சூழ் புவியில் அமிர்த மூலிகளின் ஆற்றலை வகை செய்த இடைகாட்டு சித்தரே போற்றி
இடைக்காடர் போற்றியின் பொருள்:
அடர்ந்த காடுகளுக்கு இடையே அமர்ந்து யோகம் புரிபவர். மனோன்மணி தேவியின் ஆற்றலால் கிரகங்களின் வலிமையை மாற்றும் வல்லமை பெற்றவர். மரணத்தை உண்டாக்கும் நோய்களுக்கு சஞ்சீவி மருந்துகளை கண்டறிந்தவர். சஞ்சீவி மூலிகைகளின் சக்திகளை ஆராய்ந்து அதனை வகை படுத்தியவர் என்பது இப்போற்றிகளின் பொருள்.
18 வார சித்தர் வழிபாடு முடிந்த பின் செய்ய வேண்டியவை
வழிபடும் காலத்தில் இடையில் வரும் பௌர்ணமி அன்று சித்தர்களுக்கு மலர் மாலை சாற்றி அன்று ஆலயம் வந்து வழிபாடு செய்தால் நல்ல பலன் தரும். வழிபடும் முன்னர் 5 நெய் விளக்குகள் ஏற்றி வைத்து ஆலயம் வலம் வந்து பின்னர் சித்தர் முன்னிலையில் அமர்ந்து, சித்தர் போற்றிகள் கூறி முடித்து,இடைக்காடர் போற்றி 10 நிமிடம் குறிப்பிட்ட சித்தரை மனதில் தியானித்து வேண்டுதல் கூறி முடிக்க வேண்டும். அந்நாளில் மந்திரப்பாவைக்கு அர்ச்சனை செய்வது நல்லது.
வழிபாடு காலம் முடிந்த பின்னர், தமது கோரிக்கைகள் குருமார்களின் ஆசீர்வாதத்தால் தடைகள் நீங்கி பலன் கூடத்தொடங்கும், பின்னர் அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் ஆலயம் வந்து வழிப்பட்டால் முழு பலன் உடனே கிடைக்கும்.