இராமதேவர்2021-01-25T04:08:48+00:00

இராமதேவர்

உலக நீதி தவறா யோக சித்தர். மாந்தர்கள் நெறி முறையோடு வாழ வேண்டும் என்று கருதுபவர். கேடான குணத்தோரை வெறுப்பவர். ஆன்ம நேய பண்பாளர். இந்த மகா சித்த புருஷரை வணங்குவதன் மூலம்: வஞ்சகமாக மற்றவர்களால் ஏமாற்றபட்டு இழந்து போன பொருள்களையும், களவு போன பொருள்களையும் மீண்டும் பெறவும், ஓயாமல் நமக்கு இடையூறு செய்யும் எதிரிகள் தண்டனை பெறவும் இவரின் ஆசியால் எளிதில் கைகூடும்.

இராமதேவர் வழிபாடு

நமது ஆலயத்தில் யோகம் புரியும் பதினெண் சித்தர்களை வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள். தம் வேண்டுதல்கள் நிறைவேற ஞாயிறு கிழமைகளில் தொடர்ந்து 12 முதல் 18 வாரங்கள் வழிபட்டு வந்தால் அவரின் ஆசி கூடும்.
வழிபடும் முன்னர் 5 நெய் விளக்குகள் ஏற்றி வைத்து ஆலயம் வலம் வந்து பின்னர் சித்தர் முன்னிலையில் ஒரு தூய்மையான துண்டு அல்லது சிறிய பாய் விரித்து, அமர்ந்து சித்தர் போற்றிகள் கூறி முடித்து 10 நிமிடம் குறிப்பிட்ட சித்தரை மனதில் தியானித்து வேண்டுதல் கூறி முடிக்க வேண்டும். அந்நாளில் மந்திரப்பாவைக்கு அர்ச்சனை செய்வது நல்லது.
வழிபடும் காலத்தில் இடையில் வரும் பௌர்ணமி அன்று சித்தர்களுக்கு மலர்மாலை சாற்றி வந்து வழிபாடு செய்தால் நல்ல பலன் தரும்.
வழிபாடு காலம் முடிந்த பின்னர் நமது கோரிக்கைகள் குருமார்களின் ஆசியால் தடைகள் நீங்கி பலன் கூடத் தொடங்கும், பின்னர் அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் ஆலயம் வந்து வழிபட்டால் முழு பலன் உடனே கை கூடும்.

இராமதேவர் வழிபாட்டின் நன்மைகள்

தம் வேண்டுதல்கள் நிறைவேற ஞாயிறு கிழமைகளில் தொடர்ந்து 12 முதல் 18 வாரங்கள் வழிபட்டு வந்தால் இராமதேவர் ஆசி கூடும்.
மற்றவர்களால் ஏமாற்றபட்டு இழந்த பொருள்கள், களவு போனவைகள் மீண்டும் பெறவும், ஓயாமல் தொல்லை தரும் எதிரிகள் தண்டனை பெறவும் இவரின் ஆசியால் எளிதில் கைகூடும்.

இராமதேவர் போற்றி

சதுரகிரி குகையில் யுகாந்திர காலம் யோகம் கூடிய ராம தேவ சித்தரே போற்றி
அதர்ம வகை ஆசையில் புரியும் ரசவாத வித்தைதனை அழிக்கும் ராம தேவ சித்தரே போற்றி
பாதகம் புரியும் பாவியரை பட்சமின்றி தண்டிக்கும் குழும தலைவரே ராம தேவ சித்தரே போற்றி
சூதகம் புரிந்து ஒளி வோரை பிணைத்து மன்றத்தில் நிறுத்தும் ராம தேவ சித்தரே போற்றி

இராமதேவர் போற்றியின் பொருள்

சதுரகிரி மலையில் நீண்ட காலம் சிவ யோகம் புரிந்தவர். தவறான வழியில் இரசவாத கலை பயில்பவர்களைத் தடுப்பவர். வஞ்சக குணமுடைய பாவியரை பாரபட்சமின்றி தண்டிப்பவர். சூது புரிந்து தப்பிப்போரை மன்றத்தில் நிறுத்தி தண்டிப்பவர் என்பது இப்போற்றிகளின் பொருள்.

18 வார சித்தர் வழிபாடு முடிந்த பின் செய்ய வேண்டியவை

வழிபடும் காலத்தில் இடையில் வரும் பௌர்ணமி அன்று சித்தர்களுக்கு மலர் மாலை சாற்றி அன்று ஆலயம் வந்து வழிபாடு செய்தால் நல்ல பலன் தரும். வழிபடும் முன்னர் 5 நெய் விளக்குகள் ஏற்றி வைத்து ஆலயம் வலம் வந்து பின்னர் சித்தர் முன்னிலையில் அமர்ந்து, சித்தர் போற்றிகள் இராமதேவர் போற்றி கூறி முடித்து, 10 நிமிடம் குறிப்பிட்ட சித்தரை மனதில் தியானித்து வேண்டுதல் கூறி முடிக்க வேண்டும். அந்நாளில் மந்திரப்பாவைக்கு அர்ச்சனை செய்வது நல்லது.

வழிபாடு காலம் முடிந்த பின்னர், தமது கோரிக்கைகள் குருமார்களின் ஆசீர்வாதத்தால் தடைகள் நீங்கி பலன் கூடத்தொடங்கும், பின்னர் அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் ஆலயம் வந்து வழிப்பட்டால் முழு பலன் உடனே கிடைக்கும்.

News Archives

    வரவிருக்கும் நிகழ்வுகள்

    Amaavaasai

    மே 7

    Pournami

    மே 23