மச்சமுனி2021-01-22T06:48:01+00:00

மச்சமுனி

அச்சமற்று அமைதியாக குகைகளில் யோகம் புரிபவர். ஊர் மக்களுடன் எளிமையாகக் கலந்து வாழ்பவர். ஆன்ம தத்துவங்களை, விளக்கங்களை எளிய மக்களும் புரிந்துகொள்ளும் வண்ணம் கவர்ச்சியுடன் விளக்குபவர். சொல்லற்றால் மிக்கவர். மக்களின் கூட்டங்களுக்கு இடையே விளையாட்டுத் தனமாக மகிழ்ச்சியுடன் உயர்ந்த மார்க்கத்தை விளக்குபவர். இவரை அன்போடு, மனமுருகி வேண்டி வழிபடுவதன் மூலம், நாம் எந்த துறையில் பணிபுரிந்தாலும் அந்த துறையில், செல்வம், புகழ், தலைமை, அதிகாரம் இவைகளை நம் வாழ்வில் பெற்று வாழ்ந்திட இவரின் ஆசியால் எளிதில் கைகூடும்.

மச்சமுனி வழிபாடு


நமது ஆலயத்தில் யோகம் புரியும் பதினெண் சித்தர்களை வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள். தம் வேண்டுதல்கள் நிறைவேற வெள்ளி கிழமைகளில் தொடர்ந்து 12 முதல் 18 வாரங்கள் வழிபட்டு வந்தால் அவரின் ஆசி கூடும்.
வழிபடும் முன்னர் 5 நெய் விளக்குகள் ஏற்றி வைத்து ஆலயம் வலம் வந்து பின்னர் சித்தர் முன்னிலையில் ஒரு தூய்மையான துண்டு அல்லது சிறிய பாய் விரித்து, அமர்ந்து சித்தர் போற்றிகள் கூறி முடித்து 10 நிமிடம் குறிப்பிட்ட சித்தரை மனதில் தியானித்து வேண்டுதல் கூறி முடிக்க வேண்டும். அந்நாளில் மந்திரப்பாவைக்கு அர்ச்சனை செய்வது நல்லது.
வழிபடும் காலத்தில் இடையில் வரும் பௌர்ணமி அன்று சித்தர்களுக்கு மலர்மாலை சாற்றி வந்து வழிபாடு செய்தால் நல்ல பலன் தரும்.
வழிபாடு காலம் முடிந்த பின்னர் நமது கோரிக்கைகள் குருமார்களின் ஆசியால் தடைகள் நீங்கி பலன் கூடத் தொடங்கும், பின்னர் அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் ஆலயம் வந்து வழிபட்டால் முழு பலன் உடனே கை கூடும்.

மச்சமுனி வழிபாட்டின் நன்மைகள்

தம் வேண்டுதல்கள் நிறைவேற வெள்ளி கிழமைகளில் தொடர்ந்து 12 முதல் 18 வாரங்கள் வழிபட்டு வந்தால் மச்சமுனி ஆசி கூடும்.

உலக வாழ்வில் நாம் எந்த துறையில் பணிபுரிந்தாலும், அத்துறையில் செல்வம், புகழ், தலைமை, அதிகாரம் பெற இவரின் ஆசியால் எளிதில் கைகூடும்.

மச்சமுனி போற்றி

மதுரை தலத்தில் மகத்தான பல சித்துகள் புரிந்த மச்ச முனி சித்தரே போற்றி
மதுர மொழியில் மாந்தரை ஈர்த்து உயர் பொருள் உபதேசித்த மச்ச முனி சித்தரே போற்றி
புதன் தலமான நான்மாட கூடலில் சமாதி யோகம் கூடிய மச்ச முனி சித்தரே போற்றி
பதவி புகழ் செழுமை நற்பேறுகளை நாளும் பக்தருக்கு அளிக்கும் மச்ச முனி சித்தரே போற்றி

மச்சமுனி போற்றியின் பொருள்:

மதுரை மாநகரில் பல சித்துக்களை புரிந்தவர். இனிமையான முறையில் மக்களுக்கு உயர்ந்த பொருள்களை உபதேசித்தவர். புதன் ஸ்தலம் என்று சொல்லக்கூடிய மதுரையில் சமாதியோகம் அடைந்தவர். நாடி வரும் பக்தர்களுக்கு பதவி, புகழ், செழுமை போன்ற நற்பேறுகளை அளிப்பவர் என்பது இப்போற்றிகளின் பொருள்.

18 வார சித்தர் வழிபாடு முடிந்த பின் செய்ய வேண்டியவை

வழிபடும் காலத்தில் இடையில் வரும் பௌர்ணமி அன்று சித்தர்களுக்கு மலர் மாலை சாற்றி அன்று ஆலயம் வந்து வழிபாடு செய்தால் நல்ல பலன் தரும். வழிபடும் முன்னர் 5 நெய் விளக்குகள் ஏற்றி வைத்து ஆலயம் வலம் வந்து பின்னர் சித்தர் முன்னிலையில் அமர்ந்து, சித்தர் போற்றிகள் கூறி முடித்து,மச்சமுனி போற்றி 10 நிமிடம் குறிப்பிட்ட சித்தரை மனதில் தியானித்து வேண்டுதல் கூறி முடிக்க வேண்டும். அந்நாளில் மந்திரப்பாவைக்கு அர்ச்சனை செய்வது நல்லது.
வழிபாடு காலம் முடிந்த பின்னர், தமது கோரிக்கைகள் குருமார்களின் ஆசீர்வாதத்தால் தடைகள் நீங்கி பலன் கூடத்தொடங்கும், பின்னர் அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் ஆலயம் வந்து வழிப்பட்டால் முழு பலன் உடனே கிடைக்கும்.

News Archives

    வரவிருக்கும் நிகழ்வுகள்

    Amaavaasai

    மே 7

    Pournami

    மே 23