கருவூரார்2020-03-09T09:46:57+00:00

கருவூரார்

மிக கடிமையான தவவலிமை உடையவர். கொடுமையான மன உறுதி கொண்டவர். உலக இன்பங்களிலும், பற ஞானத்திலும் நாட்டம் கொண்டவர்.

கருவூரார் வழிபாடு

நமது ஆலயத்தில் யோகம் புரியும் பதினெண் சித்தர்களை வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள். தம் வேண்டுதல்கள் நிறைவேற சனி கிழமைகளில் தொடர்ந்து 12 முதல் 18 வாரங்கள் வழிபட்டு வந்தால் அவரின் ஆசி கூடும்.
வழிபடும் முன்னர் 5 நெய் விளக்குகள் ஏற்றி வைத்து ஆலயம் வலம் வந்து பின்னர் சித்தர் முன்னிலையில் ஒரு தூய்மையான துண்டு அல்லது சிறிய பாய் விரித்து, அமர்ந்து சித்தர் போற்றிகள் கூறி முடித்து 10 நிமிடம் குறிப்பிட்ட சித்தரை மனதில் தியானித்து வேண்டுதல் கூறி முடிக்க வேண்டும். அந்நாளில் மந்திரப்பாவைக்கு அர்ச்சனை செய்வது நல்லது.
வழிபடும் காலத்தில் இடையில் வரும் பௌர்ணமி அன்று சித்தர்களுக்கு மலர்மாலை சாற்றி வந்து வழிபாடு செய்தால் நல்ல பலன் தரும்.
வழிபாடு காலம் முடிந்த பின்னர் நமது கோரிக்கைகள் குருமார்களின் ஆசியால் தடைகள் நீங்கி பலன் கூடத் தொடங்கும், பின்னர் அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் ஆலயம் வந்து வழிபட்டால் முழு பலன் உடனே கை கூடும்.

கருவூரார் வழிபாட்டின் நன்மைகள்

தம் வேண்டுதல்கள் நிறைவேற சனி கிழமைகளில் தொடர்ந்து 12 முதல் 18 வாரங்கள் வழிபட்டு வந்தால் கருவூரார் ஆசி கூடும்.

எல்லா விதமான மன கஷ்டங்களும்/துன்பங்களும், நீங்கவும், பொது வாழ்வில் விரும்பிய வண்ணம் உயரவும், இவரின் ஆசியால் எளிதில் கைகூடும்.

கருவூரார் போற்றி

கள்ளத் தனமும் கயமை செயலும் கடிதாய் வெறுக்கும் கருவூர் சித்தரே போற்றி
தெள்ளத் தெளிந்த ஞானமும் திரிபடா சிந்தையும் உள்ள கருவூர் சித்தரே போற்றி
எள்ளத் தகா வாழ்வும் எவர்க்கும் உதவும் குணமும் கொண்ட கருவூர் சித்தரே போற்றி
உள்ளத் தாற்றலால் பெரு லிங்க பந்தனம் கட்டிய கருவூர் சித்தரே போற்றி

கருவூரார் போற்றியின் பொருள்:

ஏமாற்றும் குணம் உடையோரையும், தீய செயல் புரிவோரையும் மிகவும் வெறுக்கும் குணம் உடையவர். தெளிவான ஞானமும், மனம்மாறா குணமும் உடையவர். மற்றவர்கள் இகழாத வண்ணம் வாழ்வும், அனைவருக்கும் உதவி செய்யும் குணமும் கொண்டவர். தமுடைய உள்ளத்தின் வலிமையால் தஞ்சை பெரிய லிங்கத்திற்கு அஷ்ட பந்தனம் கட்டியவர் என்பது இப்போற்றிகளின் பொருள்.

18 வார சித்தர் வழிபாடு முடிந்த பின் செய்ய வேண்டியவை

வழிபடும் காலத்தில் இடையில் வரும் பௌர்ணமி அன்று சித்தர்களுக்கு மலர் மாலை சாற்றி அன்று ஆலயம் வந்து வழிபாடு செய்தால் நல்ல பலன் தரும். வழிபடும் முன்னர் 5 நெய் விளக்குகள் ஏற்றி வைத்து ஆலயம் வலம் வந்து பின்னர் சித்தர் முன்னிலையில் அமர்ந்து, சித்தர் போற்றிகள் கூறி முடித்து,கருவூரார் போற்றி 10 நிமிடம் குறிப்பிட்ட சித்தரை மனதில் தியானித்து வேண்டுதல் கூறி முடிக்க வேண்டும். அந்நாளில் மந்திரப்பாவைக்கு அர்ச்சனை செய்வது நல்லது.
வழிபாடு காலம் முடிந்த பின்னர், தமது கோரிக்கைகள் குருமார்களின் ஆசீர்வாதத்தால் தடைகள் நீங்கி பலன் கூடத்தொடங்கும், பின்னர் அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் ஆலயம் வந்து வழிப்பட்டால் முழு பலன் உடனே கிடைக்கும்.

News Archives

    வரவிருக்கும் நிகழ்வுகள்

    Amaavaasai

    மே 7

    Pournami

    மே 23