காளாங்கிநாதர்
நெடிய உருவம் கொண்ட இவர் வாசி யோகம் புரியும் கலையில் வல்லவர். நடை பயணமாகவே பல மலைகளை அடைந்து அற்புதமான மருத்துவ மூலிகைகளை கொண்டு வருபவர். இவர் செல்லும் இடங்களில் சில காலம் தங்கி பக்குவபட்ட ஆன்மாக்களுகு வாசிப் பயிற்சி அளிப்பவர். பயண இடைவெளிகளில் சிவாலயங்களில் தங்கி அந்த ஊரின் வளங்கள், அமைதியின் பொருட்டு சில காலம் யோகம் செய்து செல்வார்.
நமக்கோ நம் குடும்பத்தினருக்கோ நோய்கள் மற்றும் உயிர் பறிக்கும் பிணிகள் விலகவும், நம்மை அது அண்டாது இருக்கவும் இவரது ஆசி துணை புரியும். மருத்துவர்களால் கைவிடப்பட்ட நோய்களைக்கூட நம்முடைய நம்பிக்கையான வழிபாட்டின் பலத்தால் இவர் தீர்க்கவல்லவர். அதுமட்டும் இன்றி நம் பிள்ளைகள் மற்றும் அடுத்து வரும் நம் சந்ததியினர் மகிழ்ச்சியுடன், ஆரோக்கியத்துடன் வாழ இவர் வழி செய்வார். கூடுதலாக, இவரை வணங்குவதால் நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
காளாங்கிநாதர் வழிபாடு
நமது ஆலயத்தில் யோகம் புரியும் பதினெண் சித்தர்களை வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள். தம் வேண்டுதல்கள் நிறைவேற வியாழன் கிழமைகளில் தொடர்ந்து 12 முதல் 18 வாரங்கள் வழிபட்டு வந்தால் அவரின் ஆசி கூடும்.
வழிபடும் முன்னர் 5 நெய் விளக்குகள் ஏற்றி வைத்து ஆலயம் வலம் வந்து பின்னர் சித்தர் முன்னிலையில் ஒரு தூய்மையான துண்டு அல்லது சிறிய பாய் விரித்து, அமர்ந்து சித்தர் போற்றிகள் கூறி முடித்து 10 நிமிடம் குறிப்பிட்ட சித்தரை மனதில் தியானித்து வேண்டுதல் கூறி முடிக்க வேண்டும். அந்நாளில் மந்திரப்பாவைக்கு அர்ச்சனை செய்வது நல்லது.
வழிபடும் காலத்தில் இடையில் வரும் பௌர்ணமி அன்று சித்தர்களுக்கு மலர்மாலை சாற்றி வந்து வழிபாடு செய்தால் நல்ல பலன் தரும்.
வழிபாடு காலம் முடிந்த பின்னர் நமது கோரிக்கைகள் குருமார்களின் ஆசியால் தடைகள் நீங்கி பலன் கூடத் தொடங்கும், பின்னர் அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் ஆலயம் வந்து வழிபட்டால் முழு பலன் உடனே கை கூடும்.
காளாங்கிநாதர் வழிபாட்டின் நன்மைகள்
தம் வேண்டுதல்கள் நிறைவேற வியாழன் கிழமைகளில் தொடர்ந்து 12 முதல் 18 வாரங்கள் வழிபட்டு வந்தால் காளாங்கிநாதர் ஆசி கூடும்.
நோய்கள்/கண்டங்கள் நீங்கி நீண்ட ஆயுள் பெற்று வாழவும், சந்ததிகளின் வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையவும் இவரின் ஆசியால் எளிதில் கைகூடும்.
காளாங்கிநாதர் போற்றி
கார்முகில் மழைவளம் அளிக்கவல்ல காளாங்கி நாத சித்தரே போற்றி
பார்தனில் பாவியும் கடைத்தேற உபதேசிக்கும் காளாங்கி நாத சித்தரே போற்றி
ஊர்தனில் மாந்தர்க்கு உவந்தே பிணிபோக்கும் காளாங்கி நாத சித்தரே போற்றி
சீர்மிகு சிவயோகம் எமக்கருள் பெருந்தகை காளாங்கி நாதரே போற்றி
காளாங்கிநாதர் போற்றியின் பொருள்:
காளாங்கிநாதர் தம்மை வணங்கும் மக்களுக்கு நல்ல மழை வளம் அளிக்க வல்லார். விவசாயம் பெருகி மக்கள் நல்ல வளத்தோடு வாழ இவர் துணை புரிவார். இந்த உலகில் பாவம் செய்த மனிதர்களுக்கு அவர்கள் உயர்நிலை அடைய தகுந்த போதனைகள் தந்து வாழ்வில் கடைத்தேற வைப்பார். அவரது ஆற்றலால் ஊர் மாந்தர்க்கு நோய்கள் ஏற்படாதவண்ணம் காத்தருள்வார். அவரை அணுகும் சீடர்களுக்கு ஞான மார்க்கத்தை எளிமையாக போதிக்க வல்லவர் என்பது இந்த போற்றிகளின் பொருள்.
18 வார சித்தர் வழிபாடு முடிந்த பின் செய்ய வேண்டியவை
வழிபடும் காலத்தில் இடையில் வரும் பௌர்ணமி அன்று சித்தர்களுக்கு மலர் மாலை சாற்றி அன்று ஆலயம் வந்து வழிபாடு செய்தால் நல்ல பலன் தரும். வழிபடும் முன்னர் 5 நெய் விளக்குகள் ஏற்றி வைத்து ஆலயம் வலம் வந்து பின்னர் சித்தர் முன்னிலையில் அமர்ந்து, சித்தர் போற்றிகள் கூறி முடித்து,காளாங்கிநாதர் போற்றி 10 நிமிடம் குறிப்பிட்ட சித்தரை மனதில் தியானித்து வேண்டுதல் கூறி முடிக்க வேண்டும். அந்நாளில் மந்திரப்பாவைக்கு அர்ச்சனை செய்வது நல்லது.
வழிபாடு காலம் முடிந்த பின்னர், தமது கோரிக்கைகள் குருமார்களின் ஆசீர்வாதத்தால் தடைகள் நீங்கி பலன் கூடத்தொடங்கும், பின்னர் அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் ஆலயம் வந்து வழிப்பட்டால் முழு பலன் உடனே கிடைக்கும்.