கமலமுனி
அன்பே உருவானவர், வேள்வி மந்திரங்களும் அதன் விதி முறைகளும் முற்றும் உணர்ந்தவர். அனைத்து வகை வேள்விகள் புரிவதிலும் வல்லவர். ஆழ்ந்த சிவ யோகம் புரிபவர். இவரை விரும்பி தொழுது வணங்கி வருவதன் மூலம் நாம் எடுக்கின்ற எல்லா பணிகளையும் பரிபூரணமாக நிறைவாக முடிக்கவும், சூழ்நிலைக்கேற்ப சமயோசித சிந்தனையுடன் செயல்படவும், மற்றவர்களுக்கு வழிக்காட்டி அவர்களை நடத்தும் ஆற்றல் பெறவும் இவரின் ஆசியால் எளிதில் கைகூடும்.
கமலமுனி வழிபாடு
நமது ஆலயத்தில் யோகம் புரியும் பதினெண் சித்தர்களை வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள். தம் வேண்டுதல்கள் நிறைவேற திங்கள் கிழமைகளில் தொடர்ந்து 12 முதல் 18 வாரங்கள் வழிபட்டு வந்தால் அவரின் ஆசி கூடும்.
வழிபடும் முன்னர் 5 நெய் விளக்குகள் ஏற்றி வைத்து ஆலயம் வலம் வந்து பின்னர் சித்தர் முன்னிலையில் ஒரு தூய்மையான துண்டு அல்லது சிறிய பாய் விரித்து, அமர்ந்து சித்தர் போற்றிகள் கூறி முடித்து 10 நிமிடம் குறிப்பிட்ட சித்தரை மனதில் தியானித்து வேண்டுதல் கூறி முடிக்க வேண்டும். அந்நாளில் மந்திரப்பாவைக்கு அர்ச்சனை செய்வது நல்லது.
வழிபடும் காலத்தில் இடையில் வரும் பௌர்ணமி அன்று சித்தர்களுக்கு மலர்மாலை சாற்றி வந்து வழிபாடு செய்தால் நல்ல பலன் தரும்.
வழிபாடு காலம் முடிந்த பின்னர் நமது கோரிக்கைகள் குருமார்களின் ஆசியால் தடைகள் நீங்கி பலன் கூடத் தொடங்கும், பின்னர் அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் ஆலயம் வந்து வழிபட்டால் முழு பலன் உடனே கை கூடும்.
கமலமுனி வழிபாட்டின் நன்மைகள்
தம் வேண்டுதல்கள் நிறைவேற திங்கள் கிழமைகளில் தொடர்ந்து 12 முதல் 18 வாரங்கள் வழிபட்டு வந்தால் கமலமுனி ஆசி கூடும்.
செய்யும் பணிகளில் நிறைவை பெறவும், சமயோசித சிந்தனை, மற்றவர்களை வழிகாட்டி நடத்தும் ஆற்றலும் இவரின் ஆசியால் எளிதில் கைகூடும்.
கமலமுனி போற்றி
கமலமுனி நாதனே கயிலை மலை யோகனே நற்போத கமலமுனி சித்தரே போற்றி
இமவான் மகள் ஈசனின் தேவி அருள் உபதேசம் பெற்ற கமலமுனி சித்தரே போற்றி
அமரர் போற்றும் ஆருர் தலத்தில் அனந்த கால யோகம் கொண்ட கமலமுனி சித்தரே போற்றி
எமனது உலகம் புகுந்த உயிரையும் மீட்டு வரவல்ல கமலமுனி சித்தரே போற்றி
கமலமுனி போற்றியின் பொருள்:
கயிலை மலையில் சிவயோகம் புரியும் நல்ல ஞானம் பெற்றவர். பார்வதி தேவியின் அருள் உபதேசம் பெற்றவர். திருவாரூரிலும் நீண்ட காலம் யோகம் செய்தவர். இறந்தோரையும் பிழைக்க வைக்கும் ஆற்றல் பெற்றவர் என்பது இப்போற்றிகளின் பொருளாகும்.
18 வார சித்தர் வழிபாடு முடிந்த பின் செய்ய வேண்டியவை
வழிபடும் காலத்தில் இடையில் வரும் பௌர்ணமி அன்று சித்தர்களுக்கு மலர் மாலை சாற்றி அன்று ஆலயம் வந்து வழிபாடு செய்தால் நல்ல பலன் தரும். வழிபடும் முன்னர் 5 நெய் விளக்குகள் ஏற்றி வைத்து ஆலயம் வலம் வந்து பின்னர் சித்தர் முன்னிலையில் அமர்ந்து, சித்தர் போற்றிகள் கூறி முடித்து,கமலமுனி போற்றி 10 நிமிடம் குறிப்பிட்ட சித்தரை மனதில் தியானித்து வேண்டுதல் கூறி முடிக்க வேண்டும். அந்நாளில் மந்திரப்பாவைக்கு அர்ச்சனை செய்வது நல்லது.
வழிபாடு காலம் முடிந்த பின்னர், தமது கோரிக்கைகள் குருமார்களின் ஆசீர்வாதத்தால் தடைகள் நீங்கி பலன் கூடத்தொடங்கும், பின்னர் அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் ஆலயம் வந்து வழிப்பட்டால் முழு பலன் உடனே கிடைக்கும்.