போகர்2020-03-09T07:00:36+00:00

போகர்

போகர் பழனி மலை சித்தர். அவர் பழநிமலையில் நவபாஷாண சிலையை வடித்து, நிறுவி வழிபாடு செய்தவர் என்பது நாம் அறிந்ததே. இவர் பழநி மலையிலேயே சமாதி அடைந்துள்ளார்.
போகர், இவர் மகிழ்ச்சியானவர், இவர் அனைவருக்கும் மகிழ்ச்சியான வாழ்வை தரவல்லவர். இவரை நாடிவரும் அன்பர்களுக்கு நீண்ட நாள் திருமண தடை விலகவும், செவ்வாய் தோஷம் அகலவும் ஆசிர்வாதம் செய்வார். மேலும், இல்லற வாழ்வில் ஏற்படும், துன்பங்கள், குழந்தையின்மை, மன ஒற்றுமை இன்மை, மற்றும் தோல் சம்பந்தபட்ட நோய்களையும் போக்கி அருள்வார். அதுமட்டும் இன்றி, நிலம், சொந்த வீடு, தொழில், தொழில் முன்னேற்றம் இவைகளை அளித்து மகிழ்ச்சியுடன் வாழ வைப்பார்.

போகர் வழிபாடு

நமது ஆலயத்தில் யோகம் புரியும் பதினெண் சித்தர்களை வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள். தம் வேண்டுதல்கள் நிறைவேற புதன் கிழமைகளில் தொடர்ந்து 12 முதல் 18 வாரங்கள் வழிபட்டு வந்தால் அவரின் ஆசி கூடும்.
வழிபடும் முன்னர் 5 நெய் விளக்குகள் ஏற்றி வைத்து ஆலயம் வலம் வந்து பின்னர் சித்தர் முன்னிலையில் ஒரு தூய்மையான துண்டு அல்லது சிறிய பாய் விரித்து, அமர்ந்து சித்தர் போற்றிகள் கூறி முடித்து 10 நிமிடம் குறிப்பிட்ட சித்தரை மனதில் தியானித்து வேண்டுதல் கூறி முடிக்க வேண்டும். அந்நாளில் மந்திரப்பாவைக்கு அர்ச்சனை செய்வது நல்லது.
வழிபடும் காலத்தில் இடையில் வரும் பௌர்ணமி அன்று சித்தர்களுக்கு மலர்மாலை சாற்றி வந்து வழிபாடு செய்தால் நல்ல பலன் தரும்.
வழிபாடு காலம் முடிந்த பின்னர் நமது கோரிக்கைகள் குருமார்களின் ஆசியால் தடைகள் நீங்கி பலன் கூடத் தொடங்கும், பின்னர் அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் ஆலயம் வந்து வழிபட்டால் முழு பலன் உடனே கை கூடும்.

போகர் வழிபாட்டின் நன்மைகள்

தம் வேண்டுதல்கள் நிறைவேற புதன் கிழமைகளில் தொடர்ந்து 12 முதல் 18 வாரங்கள் வழிபட்டு வந்தால் போகர் ஆசி கூடும்.
திருமணத்தடைகள் விலகவும், குழந்தை பேறு பெறவும், இல்லற வாழ்வில் ஏற்படும் தோஷங்கள் நீங்கி மகிழ்ச்சியாக வாழவும், செவ்வாய் தோஷம் அகல, சரும நோய்கள் முழுக்க நீங்கவும், சொந்த வீடு, நிலம், தொழில் அமையவும் இவரின் ஆசியால் எளிதில் கைகூடும்.

போகர் போற்றிகள்

புனித நாதனாம் புற தேச சித்தனாம் போகர் சித்தரே போற்றி
மனித குலத்திற்கு மந்திர மகேந்திர ஜால வித்தை அருளிய போகர் சித்தரே போற்றி
நனி தரும் வாதவித்தை ஏமவித்தை சூட்சும் உரைத்த போகர் சித்தரே போற்றி
இனிதான யோகம் கூட பிணிபடா தேகம் பெறும் முறை வகுத்த போகர் சித்தரே போற்றி

போகர் போற்றியின் பொருள்

ஞானம் தேடி வெளிநாட்டிலிருந்து இங்கு வந்த புனித சித்தர். மந்திர, மாயஜால வித்தைகளையும் பாடல்களாக புனைந்தவர். அத்துடன், ரசவாதம், உலோகத்தை பொன்னாக்கும் வித்தைகளை சூட்சுமமான முறைகளை தம் சீடர்களுக்கு உரைத்தவர். யோகம் பயில, உடலில் நோய்கள் அணுகாவண்ணம் கற்ப மருந்துகளை அருளியவர் என்பது இந்த போற்றிகளின் பொருள்.

18 வார சித்தர் வழிபாடு முடிந்த பின் செய்ய வேண்டியவை

வழிபடும் காலத்தில் இடையில் வரும் பௌர்ணமி அன்று சித்தர்களுக்கு மலர் மாலை சாற்றி அன்று ஆலயம் வந்து வழிபாடு செய்தால் நல்ல பலன் தரும். வழிபடும் முன்னர் 5 நெய் விளக்குகள் ஏற்றி வைத்து ஆலயம் வலம் வந்து பின்னர் சித்தர் முன்னிலையில் அமர்ந்து, சித்தர் போற்றிகள் கூறி முடித்து,போகர் போற்றி 10 நிமிடம் குறிப்பிட்ட சித்தரை மனதில் தியானித்து வேண்டுதல் கூறி முடிக்க வேண்டும். அந்நாளில் மந்திரப்பாவைக்கு அர்ச்சனை செய்வது நல்லது.

வழிபாடு காலம் முடிந்த பின்னர், தமது கோரிக்கைகள் குருமார்களின் ஆசீர்வாதத்தால் தடைகள் நீங்கி பலன் கூடத்தொடங்கும், பின்னர் அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் ஆலயம் வந்து வழிப்பட்டால் முழு பலன் உடனே கிடைக்கும்.

News Archives

    வரவிருக்கும் நிகழ்வுகள்

    Ankila varudappirappu

    ஜனவரி 1, 2026

    Ankila varudappirappu

    ஜனவரி 1, 2027