அகத்தியர்
ஆகத்தியர் சித்தக்குழுக்களுக்கெல்லாம் முதன்மையானவர், தலைவர் என்று கூறலாம். அவர் ஞானத்திற்கும், அறிவிற்கும் அதிபதி. இவரி வணங்குவதால் நமக்கும் நம் பிள்ளைகாளுகும் கல்வி, ஞானம் கூடும். பள்ளி, கல்லூரி மாணவர்கள் நல்ல மதிபெண்கள் பெற, நுழைவுத் தேர்வுகள் மற்றும் போட்டி தேர்வுகளில் தேர்ச்சி பெற, ஆராய்ச்சி பணிகளில் வெற்றி பெற அகத்தியரின் ஆசி துணை புரியும். அதுமட்டும் இல்லாமல் குடும்பத்தில் நிம்மதி, பணிகாளில் முன்னேற்றம், எதிரிகளை வெற்றி கொள்ளுவதை இவர் கொடுக்க வல்லவர்.
அகத்தியர் வழிபாட்டின் நன்மைகள்
தம் வேண்டுதல்கள் நிறைவேற சனி கிழமைகளில் தொடர்ந்து 12 முதல் 18 வாரங்கள் வழிபட்டு வந்தால் அகத்தியர் ஆசி கூடும்.
குடும்பத்தில் நிம்மதி, பணிகளில் முன்னேற்றம், எதிரிகளை வெற்றிக்கொள்ளுதல், கல்வி அறிவு கூடுதல் ஆகியன இவரின் ஆசியால் எளிதில் கைகூடும்.
அகத்தியர் வழிபாடு
நமது ஆலயத்தில் யோகம் புரியும் பதினெண் சித்தர்களை வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள். தம் வேண்டுதல்கள் நிறைவேற சனி கிழமைகளில் தொடர்ந்து 12 முதல் 18 வாரங்கள் வழிபட்டு வந்தால் அவரின் ஆசி கூடும்.
வழிபடும் முன்னர் 5 நெய் விளக்குகள் ஏற்றி வைத்து ஆலயம் வலம் வந்து பின்னர் சித்தர் முன்னிலையில் ஒரு தூய்மையான துண்டு அல்லது சிறிய பாய் விரித்து, அமர்ந்து சித்தர் போற்றிகள் கூறி முடித்து 10 நிமிடம் குறிப்பிட்ட சித்தரை மனதில் தியானித்து வேண்டுதல் கூறி முடிக்க வேண்டும். அந்நாளில் மந்திரப்பாவைக்கு அர்ச்சனை செய்வது நல்லது.
வழிபடும் காலத்தில் இடையில் வரும் பௌர்ணமி அன்று சித்தர்களுக்கு மலர்மாலை சாற்றி வந்து வழிபாடு செய்தால் நல்ல பலன் தரும்.
வழிபாடு காலம் முடிந்த பின்னர் நமது கோரிக்கைகள் குருமார்களின் ஆசியால் தடைகள் நீங்கி பலன் கூடத் தொடங்கும், பின்னர் அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் ஆலயம் வந்து வழிபட்டால் முழு பலன் உடனே கை கூடும்.
அகத்தியர் போற்றி
அகத்தும் புறத்தும் அமைதியின்பம் அருளும் அகத்திய சித்தரே போற்றி
சுகத்தும் துக்கத்தும் துணையாக நிற்கும் அகத்திய சித்தரே போற்றி
சிகரமும் தாழ்வும் மனநிலை மாறா சுகநிலை அருள் அகத்திய சித்தரே போற்றி
மகத்துவம் உற்ற மகத்தான அகத்தீச பொதிகை நாதரே போற்ற
அகத்தியர் போற்றியின் பொருள்:
குடும்ப வாழ்விலும், புற வாழ்விலும் மகிழ்ச்சியையும், இன்பத்தையும் தந்து ஆசெய்வதிப்பவர். மன மகிழ்ச்சியின் போதும், தாங்க்கொணா துன்பத்தின் போதும் பக்கபலமாக இருந்து நன்மை செய்பவர். வாழ்க்கையில் உயர்நிலை அடைகின்ற போதும், தாழ்வு நிலை ஏற்படும் போதும் மனதில் மாற்றங்கள் இல்லாமல் காத்து அருள்பவர். மிகுந்த சக்திமிக்க பெருமைக்குரிய பொதிகை மலையில் தவம் புரியும் அகத்தீசரே என்பது இப்போற்றிகளின் பொருள்.
18 வார சித்தர் வழிபாடு முடிந்த பின் செய்ய வேண்டியவை
வழிபடும் காலத்தில் இடையில் வரும் பௌர்ணமி அன்று சித்தர்களுக்கு மலர் மாலை சாற்றி அன்று ஆலயம் வந்து வழிபாடு செய்தால் நல்ல பலன் தரும். வழிபடும் முன்னர் 5 நெய் விளக்குகள் ஏற்றி வைத்து ஆலயம் வலம் வந்து பின்னர் சித்தர் முன்னிலையில் அமர்ந்து, சித்தர் போற்றிகள் கூறி முடித்து,அகத்தியர் போற்றி 10 நிமிடம் குறிப்பிட்ட சித்தரை மனதில் தியானித்து வேண்டுதல் கூறி முடிக்க வேண்டும். அந்நாளில் மந்திரப்பாவைக்கு அர்ச்சனை செய்வது நல்லது.
வழிபாடு காலம் முடிந்த பின்னர், தமது கோரிக்கைகள் குருமார்களின் ஆசீர்வாதத்தால் தடைகள் நீங்கி பலன் கூடத்தொடங்கும், பின்னர் அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் ஆலயம் வந்து வழிப்பட்டால் முழு பலன் உடனே கிடைக்கும்.