சிவவாக்கியர்
எளிமையானவர், எழிலான தோற்றம் கொண்டவர். மனிதர்களின் இனப் பாகுபாடு பார்ப்பதை வெறுப்பவர். சிவ பெருமானை தரிசித்து யோகம் புரிபவர். நாராயணன் மீதும் அதீத ஈடுபாடு கொண்டு வழிபடுபவர். இவரை பக்தி சிரத்தையுடன் வணங்கி வருவதன் மூலம் எதிர்காலத்தை கணித்து கூறக்கூடிய அனைத்து வகையான கலைகளில் வல்லமை பெறவும், வானியல் சம்பந்தபட்ட, அறிவு கூடவும் இவரின் ஆசியால் எளிதில் கைகூடும்.
சிவவாக்கியர் வழிபாடு
நமது ஆலயத்தில் யோகம் புரியும் பதினெண் சித்தர்களை வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள். தம் வேண்டுதல்கள் நிறைவேற புதன் கிழமைகளில் தொடர்ந்து 12 முதல் 18 வாரங்கள் வழிபட்டு வந்தால் அவரின் ஆசி கூடும்.
வழிபடும் முன்னர் 5 நெய் விளக்குகள் ஏற்றி வைத்து ஆலயம் வலம் வந்து பின்னர் சித்தர் முன்னிலையில் ஒரு தூய்மையான துண்டு அல்லது சிறிய பாய் விரித்து, அமர்ந்து சித்தர் போற்றிகள் கூறி முடித்து 10 நிமிடம் குறிப்பிட்ட சித்தரை மனதில் தியானித்து வேண்டுதல் கூறி முடிக்க வேண்டும். அந்நாளில் மந்திரப்பாவைக்கு அர்ச்சனை செய்வது நல்லது.
வழிபடும் காலத்தில் இடையில் வரும் பௌர்ணமி அன்று சித்தர்களுக்கு மலர்மாலை சாற்றி வந்து வழிபாடு செய்தால் நல்ல பலன் தரும்.
வழிபாடு காலம் முடிந்த பின்னர் நமது கோரிக்கைகள் குருமார்களின் ஆசியால் தடைகள் நீங்கி பலன் கூடத் தொடங்கும், பின்னர் அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் ஆலயம் வந்து வழிபட்டால் முழு பலன் உடனே கை கூடும்.
சிவவாக்கியர் வழிபாட்டின் நன்மைகள்
தம் வேண்டுதல்கள் நிறைவேற புதன் கிழமைகளில் தொடர்ந்து 12 முதல் 18 வாரங்கள் வழிபட்டு வந்தால் சிவவாக்கியர் ஆசி கூடும்.
எதிர் காலத்தை கணித்துக் கூறக்கூடிய அனைத்து கலைகளிலும் வல்லமை பெறவும், வானியல் சம்பந்தப்பட்ட அறிவுகூடவும் இவரின் ஆசியால் எளிதில் கைகூடும்.
சிவவாக்கியர் போற்றி
பரந்தாம கிருஷ்ணனின் மறுவடிவாய் தோற்றும் சிவ வாக்கிய சித்தரே போற்றி
நரமாந்தர் தம்மில் மேலோர் கீழோர் பேதமில்லை என முழங்கிய சிவ வாக்கிய சித்தரே போற்றி
கரம் துடிகொண்டு ஆடும் சிவநடன மந்திரங்களை பகுத்த சிவ வாக்கிய சித்தரே போற்றி
பரவச நிலையில் இயற்கை மூலரகசியங்கள் கண்டு தெளிந்த சிவ வாக்கிய சித்தரே போற்றி
சிவவாக்கியர் போற்றியின் பொருள்
கிருஷ்ண பகவானின் மறுவடிவம் போல் தோற்றம் கொண்டவர். மனித குலத்தில் இன பேதம் பாராதவர். நீண்ட காலம் தொடர்ச்சியாக யோகம் புரிபவர். சிவனாரின் உடுக்கை ஒலி நாதங்களை மந்திரங்களாகக் கண்டறிந்தவர். இயற்கையின் மூலங்களான, நாத, விந்து இரகசியங்களைக் கண்டு தெளிந்தவர் என்பது இப்போற்றிகளின் பொருள்.
18 வார சித்தர் வழிபாடு முடிந்த பின் செய்ய வேண்டியவை
வழிபடும் காலத்தில் இடையில் வரும் பௌர்ணமி அன்று சித்தர்களுக்கு மலர் மாலை சாற்றி அன்று ஆலயம் வந்து வழிபாடு செய்தால் நல்ல பலன் தரும். வழிபடும் முன்னர் 5 நெய் விளக்குகள் ஏற்றி வைத்து ஆலயம் வலம் வந்து பின்னர் சித்தர் முன்னிலையில் அமர்ந்து, சித்தர் போற்றிகள் சிவவாக்கியர் போற்றி கூறி முடித்து, 10 நிமிடம் குறிப்பிட்ட சித்தரை மனதில் தியானித்து வேண்டுதல் கூறி முடிக்க வேண்டும். அந்நாளில் மந்திரப்பாவைக்கு அர்ச்சனை செய்வது நல்லது.
வழிபாடு காலம் முடிந்த பின்னர், தமது கோரிக்கைகள் குருமார்களின் ஆசீர்வாதத்தால் தடைகள் நீங்கி பலன் கூடத்தொடங்கும், பின்னர் அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் ஆலயம் வந்து வழிப்பட்டால் முழு பலன் உடனே கிடைக்கும்.