புலஸ்தியர்
இந்த மகா சித்தர் தமது ஐம்புலங்களையும் ஒடுக்கி யோகம் புரிந்து உடலையே தணலாக தகித்து கொண்டு இருப்பவர். அதீதமான ஞானமும், மனதின் ஆற்றலும் கைவர பெற்றவர். இவரை தேடி வந்து வணங்குபவர்களுக்கு பொது சபைகளில் அனைவரையும் ஈர்க்கும் வண்ணம் பேசும் வல்லமை தருபவர். நல்ல நினைவாற்றலையும் கொடுப்பவர். மேலும், மன அமைதிக்கூடவும் இவரின் ஆசியால் எளிதில் கைகூடும்.
புலஸ்தியர் வழிபாட்டின் நன்மைகள்
தம் வேண்டுதல்கள் நிறைவேற புதன் கிழமைகளில் தொடர்ந்து 12 முதல் 18 வாரங்கள் வழிபட்டு வந்தால் புலஸ்தியர் ஆசி கூடும்.
பொது சபைகளில் அனைவரையும் ஈர்க்கும் வண்ணம் பேசும் வல்லமை பெறவும், நல்ல நினைவாற்றல் பெற, மன அமைதி கூடவும் இவரின் ஆசியால் எளிதில் கைகூடும்.
புலஸ்தியர் வழிபாடு
நமது ஆலயத்தில் யோகம் புரியும் பதினெண் சித்தர்களை வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள். தம் வேண்டுதல்கள் நிறைவேற புதன் கிழமைகளில் தொடர்ந்து 12 முதல் 18 வாரங்கள் வழிபட்டு வந்தால் அவரின் ஆசி கூடும்.
வழிபடும் முன்னர் 5 நெய் விளக்குகள் ஏற்றி வைத்து ஆலயம் வலம் வந்து பின்னர் சித்தர் முன்னிலையில் ஒரு தூய்மையான துண்டு அல்லது சிறிய பாய் விரித்து, அமர்ந்து சித்தர் போற்றிகள் கூறி முடித்து 10 நிமிடம் குறிப்பிட்ட சித்தரை மனதில் தியானித்து வேண்டுதல் கூறி முடிக்க வேண்டும். அந்நாளில் மந்திரப்பாவைக்கு அர்ச்சனை செய்வது நல்லது.
வழிபடும் காலத்தில் இடையில் வரும் பௌர்ணமி அன்று சித்தர்களுக்கு மலர்மாலை சாற்றி வந்து வழிபாடு செய்தால் நல்ல பலன் தரும்.
வழிபாடு காலம் முடிந்த பின்னர் நமது கோரிக்கைகள் குருமார்களின் ஆசியால் தடைகள் நீங்கி பலன் கூடத் தொடங்கும், பின்னர் அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் ஆலயம் வந்து வழிபட்டால் முழு பலன் உடனே கை கூடும்.
புலஸ்தியர் போற்றிகள்
புரியாத தத்துவத்தையும் எளிதாய் புரியும் வகை போதிக்கும் புலஸ்திய சித்தரே போற்றி
அரிதான மந்திரங்களும் தமக்கே எளிதாக வசமாக்கும் புலஸ்திய சித்தரே போற்றி
விரிவான அண்டம் முழுதும் ககன மார்கமாய் கடக்க வல்ல புலஸ்திய சித்தரே போற்றி
பரிவான சிந்தை கொண்டு பறிபோன பக்தர்களின் பொருள் மீட்டுத்தரும் புலஸ்திய சித்தரே போற்றி
புலஸ்தியர் போற்றியின் பொருள்
புரியாத தத்துவ விளக்கங்களையும் எளிதாக மக்களுக்கு புரியும் வண்ணம் விளக்க வல்லவர். மிக கடினமான மந்திரங்களையும், தனக்கே உரிய முறையில் எளிதாக வசப்படுத்திக்கொள்பவர். அனைத்து அண்டங்களையும், ஆகாய மார்க்கமாக, கடக்க வல்லவர். தொலைந்துப் போன பொருள்களை பரிவுடன் அதனை காட்டி தருபவர் என்பதே இப்போற்றிகாளின் பொருள்.
18 வார சித்தர் வழிபாடு முடிந்த பின் செய்ய வேண்டியவை
வழிபடும் காலத்தில் இடையில் வரும் பௌர்ணமி அன்று சித்தர்களுக்கு மலர் மாலை சாற்றி அன்று ஆலயம் வந்து வழிபாடு செய்தால் நல்ல பலன் தரும். வழிபடும் முன்னர் 5 நெய் விளக்குகள் ஏற்றி வைத்து ஆலயம் வலம் வந்து பின்னர் சித்தர் முன்னிலையில் அமர்ந்து, சித்தர் போற்றிகள் கூறி முடித்து,புலஸ்தியர் போற்றி 10 நிமிடம் குறிப்பிட்ட சித்தரை மனதில் தியானித்து வேண்டுதல் கூறி முடிக்க வேண்டும். அந்நாளில் மந்திரப்பாவைக்கு அர்ச்சனை செய்வது நல்லது.
வழிபாடு காலம் முடிந்த பின்னர், தமது கோரிக்கைகள் குருமார்களின் ஆசீர்வாதத்தால் தடைகள் நீங்கி பலன் கூடத்தொடங்கும், பின்னர் அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் ஆலயம் வந்து வழிப்பட்டால் முழு பலன் உடனே கிடைக்கும்.