கொங்கணவர்
கொடும் சித்தர் என்றும் இவருக்குப் பெயர். உதாரணமாக கொடிய பாஷாண மருந்து தயாரித்து தானே சோதித்து பார்ப்பார். மிகக் கடுமையான கலைகளையும் விடா முயற்சியாக பயின்று வெற்றி காண்பவர். குருவருளே பெரிதென போற்றுபவர். இவரை பய பக்தியுடன் வணங்கி வந்தால் ஆயுளில் தோன்றும் கண்ட நோய்கள் நீங்கவும், நஞ்சு வகைகளால் தோன்றக்கூடிய கொடிய உபாதைகள் நேராமலும் பாதுகாப்பதுடன், நாம் இணைந்து இருக்கும் குழுக்களில் தலைமை தாங்கும் ஆற்றலும் இவரின் ஆசியால் எளிதில் கைகூடும்.
நமது ஆலயத்தில் யோகம் புரியும் பதினெண் சித்தர்களை வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள். தம் வேண்டுதல்கள் நிறைவேற திங்கள் கிழமைகளில் தொடர்ந்து 12 முதல் 18 வாரங்கள் வழிபட்டு வந்தால் அவரின் ஆசி கூடும்.
வழிபடும் முன்னர் 5 நெய் விளக்குகள் ஏற்றி வைத்து ஆலயம் வலம் வந்து பின்னர் சித்தர் முன்னிலையில் ஒரு தூய்மையான துண்டு அல்லது சிறிய பாய் விரித்து, அமர்ந்து சித்தர் போற்றிகள் கூறி முடித்து 10 நிமிடம் குறிப்பிட்ட சித்தரை மனதில் தியானித்து வேண்டுதல் கூறி முடிக்க வேண்டும். அந்நாளில் மந்திரப்பாவைக்கு அர்ச்சனை செய்வது நல்லது.
வழிபடும் காலத்தில் இடையில் வரும் பௌர்ணமி அன்று சித்தர்களுக்கு மலர்மாலை சாற்றி வந்து வழிபாடு செய்தால் நல்ல பலன் தரும்.
வழிபாடு காலம் முடிந்த பின்னர் நமது கோரிக்கைகள் குருமார்களின் ஆசியால் தடைகள் நீங்கி பலன் கூடத் தொடங்கும், பின்னர் அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் ஆலயம் வந்து வழிபட்டால் முழு பலன் உடனே கை கூடும்.
கொங்கணவர் வழிபாட்டின் நன்மைகள்
தம் வேண்டுதல்கள் நிறைவேற திங்கள் கிழமைகளில் தொடர்ந்து 12 முதல் 18 வாரங்கள் வழிபட்டு வந்தால் கொங்கணவர் ஆசி கூடும்.
ஆயுள், கண்ட நோய்கள் நீங்கவும், நஞ்சுகளால் தோன்றக்கூடிய கொடிய உபாதைகள் நேராமல் பாதுகாக்கப்படவும், குழுக்களில் தலைமை தாங்கும் ஆற்றல் பெறவும் இவரின் ஆசியால் எளிதில் கைகூடும்.
கொடிதான பாஷாண வகை மருந்துகளின் முதல்வரே கொங்கண சித்தரே போற்றி
கடிதான ரசவாத வித்தைகளை எளிதாய் புரியும் கொங்கண சித்தரே போற்றி
முடியாத வித்தை ஏதுமில்லை குருவருள் கூடின் என போதித்த கொங்கண சித்தரே போற்றி
கொடிதான நச்சு ரோகம் அழிக்கும் செந்தூர பஸ்பம் கண்ட கொங்கண சித்தரே போற்றி
கொங்கணவர் போற்றியின் பொருள்:
மிகக் கடுமையான நஞ்சு முறிப்பு மருந்துகளை தயாரிப்பதில் வல்லவர். இரசவாதக்கலைகளில் சிறந்தவர். குருவை வணங்க எல்லா கலைகளும் வசப்படும் என உணர்த்தியவர். நச்சு வகை நோய்களை அழிக்கக்கூடிய பஸ்ப மருந்துகளை தயாரிக்கும் முறைகளை வகுத்தவர் என்பது இப்போற்றிகளின் பொருள்.
வழிபடும் காலத்தில் இடையில் வரும் பௌர்ணமி அன்று சித்தர்களுக்கு மலர் மாலை சாற்றி அன்று ஆலயம் வந்து வழிபாடு செய்தால் நல்ல பலன் தரும். வழிபடும் முன்னர் 5 நெய் விளக்குகள் ஏற்றி வைத்து ஆலயம் வலம் வந்து பின்னர் சித்தர் முன்னிலையில் அமர்ந்து, சித்தர் போற்றிகள் கூறி முடித்து,கொங்கணவர் போற்றி10 நிமிடம் குறிப்பிட்ட சித்தரை மனதில் தியானித்து வேண்டுதல் கூறி முடிக்க வேண்டும். அந்நாளில் மந்திரப்பாவைக்கு அர்ச்சனை செய்வது நல்லது.
வழிபாடு காலம் முடிந்த பின்னர், தமது கோரிக்கைகள் குருமார்களின் ஆசீர்வாதத்தால் தடைகள் நீங்கி பலன் கூடத்தொடங்கும், பின்னர் அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் ஆலயம் வந்து வழிப்பட்டால் முழு பலன் உடனே கிடைக்கும்.