சட்டைநாதர்

சட்டைநாதர்2020-03-09T08:24:02+00:00

சட்டைநாதர்

இந்த மகா சித்த புருஷர் தமது யோக பலத்தால் ஒளி ஞான தேகம் பெற்றவர். சர்வ காலமும் யோக நிஷ்ட்டையில் இருந்து தம்முடைய ஆற்றலால் எல்லா துயரங்களையும் போக்குபவர். இவரை செவ்வாய் கிழமைகளில் வந்து வழிபடுவதால் ஏவல், பில்லி, சூனியம் போன்ற எல்லா மந்திர தொல்லைகளும் நீங்க இவர் வழிவகை செய்வார். மந்திரக் கலைகள் கற்று கையாள தேவையான ஆற்றல் இவரை வழிபடுவதால் கைகூடும். மேலும் ராகு, கேது கிரக தோஷங்களால் ஏற்படும் அனைத்து தொல்லைகளில் இருந்து விடு படலாம்.

சட்டைநாதர் வழிபாட்டின் நன்மைகள்

தம் வேண்டுதல்கள் நிறைவேற செவ்வாய் கிழமைகளில் தொடர்ந்து 12 முதல் 18 வாரங்கள் வழிபட்டு வந்தால் சட்டைநாதர் ஆசி கூடும்.
ஏவல், பில்லி, சூனியம் போன்ற எல்லா மந்திர தொல்லைகள் நீங்கவும், மந்திரக்கலைகளில் சிறந்த ஆற்றல் பெறவும், ராகு-கேது கிரகங்களால் ஏற்படும் அனைத்து தோஷங்களில் இருந்து விடுதலை பெறவும் இவரின் ஆசியால் எளிதில் கைகூடும்.

சட்டைநாதர் வழிபாடு

நமது ஆலயத்தில் யோகம் புரியும் பதினெண் சித்தர்களை வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள். தம் வேண்டுதல்கள் நிறைவேற செவ்வாய் கிழமைகளில் தொடர்ந்து 12 முதல் 18 வாரங்கள் வழிபட்டு வந்தால் அவரின் ஆசி கூடும்.
வழிபடும் முன்னர் 5 நெய் விளக்குகள் ஏற்றி வைத்து ஆலயம் வலம் வந்து பின்னர் சித்தர் முன்னிலையில் ஒரு தூய்மையான துண்டு அல்லது சிறிய பாய் விரித்து, அமர்ந்து சித்தர் போற்றிகள் கூறி முடித்து 10 நிமிடம் குறிப்பிட்ட சித்தரை மனதில் தியானித்து வேண்டுதல் கூறி முடிக்க வேண்டும். அந்நாளில் மந்திரப்பாவைக்கு அர்ச்சனை செய்வது நல்லது.
வழிபடும் காலத்தில் இடையில் வரும் பௌர்ணமி அன்று சித்தர்களுக்கு மலர்மாலை சாற்றி வந்து வழிபாடு செய்தால் நல்ல பலன் தரும்.
வழிபாடு காலம் முடிந்த பின்னர் நமது கோரிக்கைகள் குருமார்களின் ஆசியால் தடைகள் நீங்கி பலன் கூடத் தொடங்கும், பின்னர் அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் ஆலயம் வந்து வழிபட்டால் முழு பலன் உடனே கை கூடும்.

சட்டைநாதர் போற்றி

காழியில் சமாதியுற்று மாந்தரைக் காத்தருளும் சட்டை நாத சித்தரே போற்றி
நாழியில் தம்மை சூழூம் துஷ்ட சக்திகளை அழிக்கவல்ல சட்டை நாத சித்தரே போற்றி
வாழினில் உயிர் வதை தவிர்த்து வாழ்தலே காருண்யம் என்ற சட்டை நாத சித்தரே போற்றி
பாழினில் செல்லும் வாசியடக்கி ஊழிக்காலம் வாழும் யோகம் கண்ட சட்டை நாத சித்தரே போற்றி

சட்டைநாதர் போற்றியின் பொருள்:

சீர்காகாழியில் ஜீவ சமாதி கொண்டவர். கண்ணிமைக்கும் நேரத்தில் நம்மை தாக்க வரும் துஷ்ட சக்திகளை அழிக்க வல்லவர். உயிர் வதை தவிர்த்து வாழ்தலே காருண்யம் என்று விளக்கியவர். வீணாக வெளிசெல்லும் காற்றை அடக்கி வாசியோகம் புரிந்து ஊழிக்காலம் வாழும் கலை அறிந்தவர் என்பதே இப்போற்றிகளின் பொருள்.

18 வார சித்தர் வழிபாடு முடிந்த பின் செய்ய வேண்டியவை

வழிபடும் காலத்தில் இடையில் வரும் பௌர்ணமி அன்று சித்தர்களுக்கு மலர் மாலை சாற்றி அன்று ஆலயம் வந்து வழிபாடு செய்தால் நல்ல பலன் தரும். வழிபடும் முன்னர் 5 நெய் விளக்குகள் ஏற்றி வைத்து ஆலயம் வலம் வந்து பின்னர் சித்தர் முன்னிலையில் அமர்ந்து, சித்தர் போற்றிகள் கூறி முடித்து,சட்டைநாதர் போற்றி 10 நிமிடம் குறிப்பிட்ட சித்தரை மனதில் தியானித்து வேண்டுதல் கூறி முடிக்க வேண்டும். அந்நாளில் மந்திரப்பாவைக்கு அர்ச்சனை செய்வது நல்லது.

வழிபாடு காலம் முடிந்த பின்னர், தமது கோரிக்கைகள் குருமார்களின் ஆசீர்வாதத்தால் தடைகள் நீங்கி பலன் கூடhttps://pallikaranaisakthi.org/wp-admin/post.php?post=14743&action=edit#த்தொடங்கும், பின்னர் அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் ஆலயம் வந்து வழிப்பட்டால் முழு பலன் உடனே கிடைக்கும்.

News Archives

    வரவிருக்கும் நிகழ்வுகள்

    Ankila varudappirappu

    ஜனவரி 1, 2026

    Ankila varudappirappu

    ஜனவரி 1, 2027