திருமூலர்
இவர் நந்தி தேவரின் சீடர்களுள் ஒருவர். இவரை பின்பற்றும் சீடர்கள் மூல வர்க்கத்தினர் என படுவர். நூற்றுக்கணக்கான குளிகை வகைகளை செய்வதில் வல்லவர். திருமந்திரம் மூவாயிரம் எனும் யோகத் தந்திரப் பாடல்களை மனித குலத்திற்கு வழங்கியவர். இவரை அண்டி பணிவுடன் தொழுது வந்தால், சித்த கலைகளான இரசவாதம், சித்த மருத்துவம், சிவ யோக மந்திரங்கள், ஞான யோகம் போன்ற கலைகளில் பயில்வோர் சித்தி அடையவும் மற்றும் எழுத்தாற்றலில் புலமை பெறவும், மக்களிடையே உயர் நிலை அடையவும் இவரின் ஆசியால் எளிதில் கைகூடும்.
திருமூலர் வழிபாடு
நமது ஆலயத்தில் யோகம் புரியும் பதினெண் சித்தர்களை வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள். தம் வேண்டுதல்கள் நிறைவேற வியாழன் கிழமைகளில் தொடர்ந்து 12 முதல் 18 வாரங்கள் வழிபட்டு வந்தால் அவரின் ஆசி கூடும்.
வழிபடும் முன்னர் 5 நெய் விளக்குகள் ஏற்றி வைத்து ஆலயம் வலம் வந்து பின்னர் சித்தர் முன்னிலையில் ஒரு தூய்மையான துண்டு அல்லது சிறிய பாய் விரித்து, அமர்ந்து சித்தர் போற்றிகள் கூறி முடித்து 10 நிமிடம் குறிப்பிட்ட சித்தரை மனதில் தியானித்து வேண்டுதல் கூறி முடிக்க வேண்டும். அந்நாளில் மந்திரப்பாவைக்கு அர்ச்சனை செய்வது நல்லது.
வழிபடும் காலத்தில் இடையில் வரும் பௌர்ணமி அன்று சித்தர்களுக்கு மலர்மாலை சாற்றி வந்து வழிபாடு செய்தால் நல்ல பலன் தரும்.
வழிபாடு காலம் முடிந்த பின்னர் நமது கோரிக்கைகள் குருமார்களின் ஆசியால் தடைகள் நீங்கி பலன் கூடத் தொடங்கும், பின்னர் அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் ஆலயம் வந்து வழிபட்டால் முழு பலன் உடனே கை கூடும்.
திருமூலர் வழிபாட்டின் நன்மைகள்
தம் வேண்டுதல்கள் நிறைவேற வியாழன் கிழமைகளில் தொடர்ந்து 12 முதல் 18 வாரங்கள் வழிபட்டு வந்தால் திருமூலர் ஆசி கூடும்.
இரசவாத கலைகள், சித்த மருத்துவங்களில் மேலோங்கும் ஆற்றல் பெறவும், எழுத்தாற்றலில் புலமை பெறவும் இவரின் ஆசியால் எளிதில் கைகூடும்.
திருமூலர் போற்றி
நந்தி தேவனின் தீட்சை ஞானம் பெற்ற போற்றரும் திருமூல சித்தரே போற்றி
சிந்தனைக் கெட்டா நூறின் வகை குளிகை மணிகள் கண்ட திருமூல சித்தரே போற்றி
உந்தன் தத்துவ வர்க சீடர்களை வழிமுறையாய் பயிற்றுவித்த திருமூல சித்தரே போற்றி
முந்தி வந்த ஆதி சக்தியின் அட்சர சக்கரம் அமைத்து தந்த திருமூல சித்தரே போற்றி
திருமூலர் போற்றியின் பொருள்:
நந்தி பகவான் இடத்தில் தீக்ஷை பெற்றவர். இரசவாத கலையில் வல்லவர். குரு-சீடர் விதி முறைகளை வகுத்து முறையாக தீக்ஷை அளிப்பவர். ஆதிசக்தியின் எந்திர சக்கரத்தை வடிவமைத்தவர் என்பது இப்போற்றிகளின் பொருளாகும்.
18 வார சித்தர் வழிபாடு முடிந்த பின் செய்ய வேண்டியவை
வழிபடும் காலத்தில் இடையில் வரும் பௌர்ணமி அன்று சித்தர்களுக்கு மலர் மாலை சாற்றி அன்று ஆலயம் வந்து வழிபாடு செய்தால் நல்ல பலன் தரும். வழிபடும் முன்னர் 5 நெய் விளக்குகள் ஏற்றி வைத்து ஆலயம் வலம் வந்து பின்னர் சித்தர் முன்னிலையில் அமர்ந்து, சித்தர் போற்றிகள் கூறி முடித்து,திருமூலர் போற்றி 10 நிமிடம் குறிப்பிட்ட சித்தரை மனதில் தியானித்து வேண்டுதல் கூறி முடிக்க வேண்டும். அந்நாளில் மந்திரப்பாவைக்கு அர்ச்சனை செய்வது நல்லது.
வழிபாடு காலம் முடிந்த பின்னர், தமது கோரிக்கைகள் குருமார்களின் ஆசீர்வாதத்தால் தடைகள் நீங்கி பலன் கூடத்தொடங்கும், பின்னர் அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் ஆலயம் வந்து வழிப்பட்டால் முழு பலன் உடனே கிடைக்கும்.