தேரையர்
தேரையர், இந்த மகா சித்த புருஷர் சித்த வைத்திய முறையில் உயர்ந்த அறுவை சிகிச்சை நிபுணர். அதாவது, சில அற்புதமான மூலிகை இலைகளின் சாறுகளைக்கொண்டு உடலை அறுத்து உள்ளிருக்கும் பிணிகளை நீக்கி மீண்டும் மூலிகை சாறுகளைக் கொண்டே அறுந்த பாகங்களை இணைக்கும் ஆற்றல் பெற்றவர். இவரை வணங்கி வருபவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நோய்கள் அறவே நீங்கி ஆரோக்கியம் பெறுவர். மேலும் மூளை, நரம்பு சம்பந்தமான நோய்கள் முழுக்க குணமாக இவரின் ஆசியால் எளிதில் கைகூடும்.
தேரையர் வழிபாடு
நமது ஆலயத்தில் யோகம் புரியும் பதினெண் சித்தர்களை வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள். தம் வேண்டுதல்கள் நிறைவேற செவ்வாய் கிழமைகளில் தொடர்ந்து 12 முதல் 18 வாரங்கள் வழிபட்டு வந்தால் அவரின் ஆசி கூடும்.
வழிபடும் முன்னர் 5 நெய் விளக்குகள் ஏற்றி வைத்து ஆலயம் வலம் வந்து பின்னர் சித்தர் முன்னிலையில் ஒரு தூய்மையான துண்டு அல்லது சிறிய பாய் விரித்து, அமர்ந்து சித்தர் போற்றிகள் கூறி முடித்து 10 நிமிடம் குறிப்பிட்ட சித்தரை மனதில் தியானித்து வேண்டுதல் கூறி முடிக்க வேண்டும். அந்நாளில் மந்திரப்பாவைக்கு அர்ச்சனை செய்வது நல்லது.
வழிபடும் காலத்தில் இடையில் வரும் பௌர்ணமி அன்று சித்தர்களுக்கு மலர்மாலை சாற்றி வந்து வழிபாடு செய்தால் நல்ல பலன் தரும்.
வழிபாடு காலம் முடிந்த பின்னர் நமது கோரிக்கைகள் குருமார்களின் ஆசியால் தடைகள் நீங்கி பலன் கூடத் தொடங்கும், பின்னர் அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் ஆலயம் வந்து வழிபட்டால் முழு பலன் உடனே கை கூடும்.
தேரையர் வழிபாட்டின் நன்மைகள்
தம் வேண்டுதல்கள் நிறைவேற செவ்வாய் கிழமைகளில் தொடர்ந்து 12 முதல் 18 வாரங்கள் வழிபட்டு வந்தால் தேரையர் ஆசி கூடும்.
அறுவை சிகிச்சை பெற வேண்டிய நோய்கள் அறவே நீங்க, மூளை, நரம்பு சம்பந்தமான நோய்கள் முழுக்க குணமாக இவரின் ஆசியால் எளிதில் கைகூடும்.
தேரையர் போற்றி
தேகமதை வகுத்து தேர்ந்த சிகிச்சை முறை கண்ட தேரைய சித்தரே போற்றி
போகமதை ஒதுக்கி ஜலமதில் மூழ்கி சமாதி அடங்கும் தேரைய சித்தரே போற்ற
ஆகம விதிகளும் அருள் நாத தத்துவங்களும் முற்றுணர்ந்த தேரைய சித்தரே போற்றி
சோகமது ஒழித்து சுத்தஞான பரதத்துவத்தில் திளைக்கும் தேரைய சித்தரே போற்றி
தேரையர் போற்றியின் பொருள்
அறுவை சிகிச்சை செய்ய வல்லவர். உலக இன்பங்களை ஒதிக்கி நீரினில் மூழ்கி சமாதி யோகம் செய்பவர். எல்லா வேத விதிகளையும், ஓண்கார நாத தத்துவங்களையும் அறிந்துணர்ந்தவர், என்றும் மகிழ்ச்சியுடன் தூய ஞான ஒளி தத்துவத்தை தியானிப்பவர் என்பது இப்போற்றிகளின் பொருள்.
18 வார சித்தர் வழிபாடு முடிந்த பின் செய்ய வேண்டியவை
வழிபடும் காலத்தில் இடையில் வரும் பௌர்ணமி அன்று சித்தர்களுக்கு மலர் மாலை சாற்றி அன்று ஆலயம் வந்து வழிபாடு செய்தால் நல்ல பலன் தரும். வழிபடும் முன்னர் 5 நெய் விளக்குகள் ஏற்றி வைத்து ஆலயம் வலம் வந்து பின்னர் சித்தர் முன்னிலையில் அமர்ந்து, சித்தர் போற்றிகள் தேரையர் போற்றி கூறி முடித்து, 10 நிமிடம் குறிப்பிட்ட சித்தரை மனதில் தியானித்து வேண்டுதல் கூறி முடிக்க வேண்டும். அந்நாளில் மந்திரப்பாவைக்கு அர்ச்சனை செய்வது நல்லது.
வழிபாடு காலம் முடிந்த பின்னர், தமது கோரிக்கைகள் குருமார்களின் ஆசீர்வாதத்தால் தடைகள் நீங்கி பலன் கூடத்தொடங்கும், பின்னர் அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் ஆலயம் வந்து வழிப்பட்டால் முழு பலன் உடனே கிடைக்கும்.