பாம்பாட்டி சித்தர்
இந்த யோக சித்தர் ஆதார யோகம் புரிவதில் வல்லவர். குண்டலினி ஆற்றாலினால் சகல சித்திகளும் புரிபவர். ஆறு ஆதாரத் தலைவனாம் முருகனை வழிபட்டு யோக சித்தி அடைந்தவர். இவரை தொடர்ந்து வணங்கி வருவதன் மூலம், குறிப்பிட்ட காலங்களின் அடிக்கடி தோன்றி தொல்லை தரும் பருவக்கால நோய்களானவை நீங்கும். உதாரணமாக: 1) தலைவலி, 2) ஒவ்வாமை என்கின்ற (allergy), 3) உள்நாக்கு வீங்குதல் (tonsils) போன்றவை நீங்கும். மேலும், இரத்ததில் நோய் எதிர்ப்பாற்றல் கூடும். இரத்த குறைப்பாடுகள், இதயம், சர்க்கரை சம்பந்தமான நோய்கள் (sugar, BP, heart problems) நல்லபடியாக குணமடையவும், இவரின் ஆசியால் எளிதில் கைகூடும்.
பாம்பாட்டி சித்தர் வழிபாடு
நமது ஆலயத்தில் யோகம் புரியும் பதினெண் சித்தர்களை வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள். தம் வேண்டுதல்கள் நிறைவேற ஞாயிறு கிழமைகளில் தொடர்ந்து 12 முதல் 18 வாரங்கள் வழிபட்டு வந்தால் அவரின் ஆசி கூடும்.
வழிபடும் முன்னர் 5 நெய் விளக்குகள் ஏற்றி வைத்து ஆலயம் வலம் வந்து பின்னர் சித்தர் முன்னிலையில் ஒரு தூய்மையான துண்டு அல்லது சிறிய பாய் விரித்து, அமர்ந்து சித்தர் போற்றிகள் கூறி முடித்து 10 நிமிடம் குறிப்பிட்ட சித்தரை மனதில் தியானித்து வேண்டுதல் கூறி முடிக்க வேண்டும். அந்நாளில் மந்திரப்பாவைக்கு அர்ச்சனை செய்வது நல்லது.
வழிபடும் காலத்தில் இடையில் வரும் பௌர்ணமி அன்று சித்தர்களுக்கு மலர்மாலை சாற்றி வந்து வழிபாடு செய்தால் நல்ல பலன் தரும்.
வழிபாடு காலம் முடிந்த பின்னர் நமது கோரிக்கைகள் குருமார்களின் ஆசியால் தடைகள் நீங்கி பலன் கூடத் தொடங்கும், பின்னர் அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் ஆலயம் வந்து வழிபட்டால் முழு பலன் உடனே கை கூடும்.
பாம்பாட்டி சித்தர் வழிபாட்டின் நன்மைகள்
தம் வேண்டுதல்கள் நிறைவேற ஞாயிறு கிழமைகளில் தொடர்ந்து 12 முதல் 18 வாரங்கள் வழிபட்டு வந்தால் பாம்பாட்டி சித்தர் ஆசி கூடும்.
அடிக்கடி தோன்றி தொல்லை தரும் நோய்கள் நிரந்தரமாக நீங்கவும், உடலில் நோய் எதிர்ப்பாற்றல் கூடவும், இரத்தம்/இதயம்/சக்கரை சம்பந்தமான நோய்கள் முழு குணம் அடையவும் இவரின் ஆசியால் எளிதில் கைகூடும்.
பாம்பாட்டி சித்தர் போற்றி
பண்பு திகழ் பவித்ர குண்டலினி யோக சித்தி நாதரே பாம்பாட்டி சித்தரே போற்றி
அண்டம் புகழ் குரு மருந்து முடிக்கும் வாத வித்தகரே பாம்பாட்டி சித்தரே போற்றி
கண்கவர் எழிலோன் மருதமலை பெருமானை நிறுவித் தொழுத பாம்பாட்டி சித்தரே போற்றி
மண்ணுலக மாந்தர் அறிய குண்டலினி யோகமுறை அருளிய பாம்பாட்டி சித்தரே போற்றி
பாம்பாட்டி சித்தர் போற்றியின் பொருள்:
ஆதார குண்டலினி யோகம் புரிபவர். சித்த மருத்துவத்தில் குரு மருந்து எனப்படும் சகல நோய்களையும் நீக்க வல்ல மருந்தைத் தயாரிப்பதில் வல்லவர். மருத மலையானை நிறுவித் தொழுதவர். உலக மாந்தருக்கு குண்டலினி யோக முறைகளைப் பாடல்களாக எழுதி அளித்தவர் என்பது இப்போற்றிகளின் பொருள்.
18 வார சித்தர் வழிபாடு முடிந்த பின் செய்ய வேண்டியவை
வழிபடும் காலத்தில் இடையில் வரும் பௌர்ணமி அன்று சித்தர்களுக்கு மலர் மாலை சாற்றி அன்று ஆலயம் வந்து வழிபாடு செய்தால் நல்ல பலன் தரும். வழிபடும் முன்னர் 5 நெய் விளக்குகள் ஏற்றி வைத்து ஆலயம் வலம் வந்து பின்னர் சித்தர் முன்னிலையில் அமர்ந்து, சித்தர் போற்றிகள் கூறி முடித்து,பாம்பாட்டி சித்தர் போற்றி 10 நிமிடம் குறிப்பிட்ட சித்தரை மனதில் தியானித்து வேண்டுதல் கூறி முடிக்க வேண்டும். அந்நாளில் மந்திரப்பாவைக்கு அர்ச்சனை செய்வது நல்லது.
வழிபாடு காலம் முடிந்த பின்னர், தமது கோரிக்கைகள் குருமார்களின் ஆசீர்வாதத்தால் தடைகள் நீங்கி பலன் கூடத்தொடங்கும், பின்னர் அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் ஆலயம் வந்து வழிப்பட்டால் முழு பலன் உடனே கிடைக்கும்.