பிண்ணாக்கீசர்
முழு மௌன யோகம் புரிந்து கொண்டு இருப்பவர். அடிக்கடி பரவெளி மார்க்கமாக சிவஸ்தலங்களை அடைந்து சிவனை வழிபடுபவர். புனித தீர்த்தக்கரைகளில் அமர்ந்து யோகம் புரிபவர். இவரை வழிபடுவதன் மூலம் வெளிநாட்டு சம்பந்தப்பட்ட அனைத்து பலன்கள் பெறவும், உதாரணமாக: 1) பொருளீட்டுதல், 2) வெளிநாட்டு தொடர்பான பணி செய்தல் அல்லது 3) வெளிநாட்டில் பணி செய்தல், 4) ஏற்றுமதி இறக்குமதி சம்பந்தப்பட்ட தொழில்களில் விருத்தி அடைதல், 5) வெளிநாட்டு குடியுரிமை பெறுதல் போன்றவைகள் இவரின் ஆசியால் எளிதில் கைகூடும்.
பிண்ணாக்கீசர் வழிபாடு
நமது ஆலயத்தில் யோகம் புரியும் பதினெண் சித்தர்களை வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள். தம் வேண்டுதல்கள் நிறைவேற வெள்ளி கிழமைகளில் தொடர்ந்து 12 முதல் 18 வாரங்கள் வழிபட்டு வந்தால் அவரின் ஆசி கூடும்.
வழிபடும் முன்னர் 5 நெய் விளக்குகள் ஏற்றி வைத்து ஆலயம் வலம் வந்து பின்னர் சித்தர் முன்னிலையில் ஒரு தூய்மையான துண்டு அல்லது சிறிய பாய் விரித்து, அமர்ந்து சித்தர் போற்றிகள் கூறி முடித்து 10 நிமிடம் குறிப்பிட்ட சித்தரை மனதில் தியானித்து வேண்டுதல் கூறி முடிக்க வேண்டும். அந்நாளில் மந்திரப்பாவைக்கு அர்ச்சனை செய்வது நல்லது.
வழிபடும் காலத்தில் இடையில் வரும் பௌர்ணமி அன்று சித்தர்களுக்கு மலர்மாலை சாற்றி வந்து வழிபாடு செய்தால் நல்ல பலன் தரும்.
வழிபாடு காலம் முடிந்த பின்னர் நமது கோரிக்கைகள் குருமார்களின் ஆசியால் தடைகள் நீங்கி பலன் கூடத் தொடங்கும், பின்னர் அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் ஆலயம் வந்து வழிபட்டால் முழு பலன் உடனே கை கூடும்.
பிண்ணாக்கீசர் வழிபாட்டின் நன்மைகள்
தம் வேண்டுதல்கள் நிறைவேற வெள்ளி கிழமைகளில் தொடர்ந்து 12 முதல் 18 வாரங்கள் வழிபட்டு வந்தால் பிண்ணாக்கீசர் ஆசி கூடும்.
வெளிநாட்டு சம்பந்தப்பட்ட அனைத்து பலன்களும் பெறவும் (பொருள் ஈட்டல், தொடர்பு பணி செய்தல், ஏற்றுமதி, இறக்குமதி, குடியுரிமை) முதலியன இவரின் ஆசியால் எளிதில் கை கூடும்.
பிண்ணாக்கீசர் போற்றி
பேசுதல் அற்று பெருஞான யோகம் பிறழாத பிண்ணாக்கீசரே போற்றி
கூசுதல் அற்று ஒளிரும் மூலச்சுடர் கனலில் கலந்திருக்கும் பிண்ணாக்கீசரே போற்றி
மாசு இல்லா பராபரை திரிகோணத் திரேதாயை தரிசித்திருக்கும் பிண்ணாக்கீசரே போற்றி
வீசு மணம் கமழ் கோணக் குறிஞ்சியில் குகை வாசம் இருக்கும் பிண்ணாக்கீசரே போற்றி
பிண்ணாக்கீசர் போற்றியின் பொருள்:
மௌனயோகம் எனும் பெருஞான யோகத்தில் நிலை தவறாது இருப்பவர். மூலக்கனல் எனும் பராபரையை நீங்காது தரிசித்து இருப்பவர். கோணக் குறிஞ்சி எனும் தலத்தில் குகை வாசம் புரிபவர் என்பது இந்த போற்றிகளின் பொருள்.
18 வார சித்தர் வழிபாடு முடிந்த பின் செய்ய வேண்டியவை
வழிபடும் காலத்தில் இடையில் வரும் பௌர்ணமி அன்று சித்தர்களுக்கு மலர் மாலை சாற்றி அன்று ஆலயம் வந்து வழிபாடு செய்தால் நல்ல பலன் தரும். வழிபடும் முன்னர் 5 நெய் விளக்குகள் ஏற்றி வைத்து ஆலயம் வலம் வந்து பின்னர் சித்தர் முன்னிலையில் அமர்ந்து, சித்தர் போற்றிகள் கூறி முடித்து,பிண்ணாக்கீசர் போற்றி 10 நிமிடம் குறிப்பிட்ட சித்தரை மனதில் தியானித்து வேண்டுதல் கூறி முடிக்க வேண்டும். அந்நாளில் மந்திரப்பாவைக்கு அர்ச்சனை செய்வது நல்லது.
வழிபாடு காலம் முடிந்த பின்னர், தமது கோரிக்கைகள் குருமார்களின் ஆசீர்வாதத்தால் தடைகள் நீங்கி பலன் கூடத்தொடங்கும், பின்னர் அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் ஆலயம் வந்து வழிப்பட்டால் முழு பலன் உடனே கிடைக்கும்.