புலிப்பாணி
சிவனை நோக்கிக் கடும் தவம் புரிந்தவர். அணுக்கூறுகளின் தத்துவங்களை முற்றும் உணர்ந்தவர். அதன் ஐந்து வகை ஆற்றல்களையும், செயல்படும் முறைகளையும் தெளிவாக உணர்ந்தவர். இறை ஒளி இரகசியங்களை ஞானத்தால் கண்டுத்தெளிந்தவர். இவரை அடிபணிந்து வணங்குவதன் மூலம் மனம் சம்பந்தப்பட்ட அனைத்து உபாதைகளும், மன நோய்கள் நீங்கவும், தன்னம்பிக்கைக் கூடி ஆற்றலுடன் எதையும் சாதிக்கும் வல்லமை பெறவும் இவரின் ஆசியால் எளிதில் கைகூடும்.
புலிப்பாணி வழிபாடு
நமது ஆலயத்தில் யோகம் புரியும் பதினெண் சித்தர்களை வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள். தம் வேண்டுதல்கள் நிறைவேற திங்கள் கிழமைகளில் தொடர்ந்து 12 முதல் 18 வாரங்கள் வழிபட்டு வந்தால் அவரின் ஆசி கூடும்.
வழிபடும் முன்னர் 5 நெய் விளக்குகள் ஏற்றி வைத்து ஆலயம் வலம் வந்து பின்னர் சித்தர் முன்னிலையில் ஒரு தூய்மையான துண்டு அல்லது சிறிய பாய் விரித்து, அமர்ந்து சித்தர் போற்றிகள் கூறி முடித்து 10 நிமிடம் குறிப்பிட்ட சித்தரை மனதில் தியானித்து வேண்டுதல் கூறி முடிக்க வேண்டும். அந்நாளில் மந்திரப்பாவைக்கு அர்ச்சனை செய்வது நல்லது.
வழிபடும் காலத்தில் இடையில் வரும் பௌர்ணமி அன்று சித்தர்களுக்கு மலர்மாலை சாற்றி வந்து வழிபாடு செய்தால் நல்ல பலன் தரும்.
வழிபாடு காலம் முடிந்த பின்னர் நமது கோரிக்கைகள் குருமார்களின் ஆசியால் தடைகள் நீங்கி பலன் கூடத் தொடங்கும், பின்னர் அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் ஆலயம் வந்து வழிபட்டால் முழு பலன் உடனே கை கூடும்.
புலிப்பாணி வழிபாட்டின் நன்மைகள்
தம் வேண்டுதல்கள் நிறைவேற திங்கள் கிழமைகளில் தொடர்ந்து 12 முதல் 18 வாரங்கள் வழிபட்டு வந்தால் புலிப்பாணி ஆசி கூடும்.
மன சம்பந்தபட்ட அனைத்து உபாதைகள், நோய்கள் நீங்கவும், தன்னம்பிக்கை ஆற்றல் பெற்று எதையும் சாதிக்கும் திறன் பெற இவரின் ஆசியால் எளிதில் கைகூடும்.
புலிப்பாணி போற்றி
புலிபோன்ற தோற்றம் கொண்டவரே நடராஜர் தரிசனம் காண்பவரே புலிப்பாணி சித்தரே போற்றி
ஒலிக்கும் உடுக்கை நாதத்தில் ஆன்ம லயம் சுகித்திருக்கும் பெரும் புலிப்பாணி சித்தரே போற்றி
சிலிர்த்து மோகித்து சிவனடி அமரும் பெரும் பேரு பெற்ற புலிப்பாணி சித்தரே போற்றி
நலிந்து வாடும் எங்களின் துயரங்களும் அச்சங்களும் அறவே அகற்றி அருள வேண்டும் புலிப்பாணி சித்தரே போற்றி
புலிப்பாணி போற்றியின் பொருள்:
நடராஜப்பெருமானின் அருகில் இருந்து தரிசனம் காண்பவர். சிவனின் உடுக்கை நாதத்தில் ஆன்மாவை ஈடுபடுத்தி சுகித்து இருப்பவர். நலிந்து கஷ்டப்படும் மக்களின் துயரங்களையும், அச்சங்களையும் போக்கி அருள்புரிபவர் என்பது இப்போற்றிகளின் பொருள்.
18 வார சித்தர் வழிபாடு முடிந்த பின் செய்ய வேண்டியவை
வழிபடும் காலத்தில் இடையில் வரும் பௌர்ணமி அன்று சித்தர்களுக்கு மலர் மாலை சாற்றி அன்று ஆலயம் வந்து வழிபாடு செய்தால் நல்ல பலன் தரும். வழிபடும் முன்னர் 5 நெய் விளக்குகள் ஏற்றி வைத்து ஆலயம் வலம் வந்து பின்னர் சித்தர் முன்னிலையில் அமர்ந்து, சித்தர் போற்றிகள் கூறி முடித்து,புலிப்பாணி போற்றி 10 நிமிடம் குறிப்பிட்ட சித்தரை மனதில் தியானித்து வேண்டுதல் கூறி முடிக்க வேண்டும். அந்நாளில் மந்திரப்பாவைக்கு அர்ச்சனை செய்வது நல்லது.
வழிபாடு காலம் முடிந்த பின்னர், தமது கோரிக்கைகள் குருமார்களின் ஆசீர்வாதத்தால் தடைகள் நீங்கி பலன் கூடத்தொடங்கும், பின்னர் அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் ஆலயம் வந்து வழிப்பட்டால் முழு பலன் உடனே கிடைக்கும்.