Latest Videos
1 of 10
Upcoming Events
Event Alert
சுப்பிரமணிய ஐயர் தன் மீது கொண்ட ஆழ்ந்த நம்பிக்கை அதன் வெளிப்பாடாக வந்த வார்த்தைகள் பொய்த்து விடக்கூடாது என்பதற்காக தை அமாவாசை அன்று முழு நிலவினை தோன்றச் செய்து அபிராமி அன்னை இதன் மூலமாக சுப்பிரமணிய ஐயர் தன் மீது கொண்ட ஆழ்ந்த நம்பிக்கையை உலகறியச் செய்து அவருக்கு அபிராமி பட்டர் எனும் நாமத்தையும் வழங்கினார். இந்நிகழ்வு ஆண்டு தோறும் நமது ஆலயத்தில் ஒலி ஒளி காட்சியுடன் வெகு சிறப்பாக பக்தர்களின் துணையுடன் நடந்து வருகிறது. அவ்வாறே இந்த ஆண்டும் 09.02.2024 வெள்ளிக்கிழமை அன்று மாலை 6.00மணியளவில் நமது ஆலயத்தில் இவ்விழா சிறப்பாக நடைபெற உள்ளது. இதில் அன்பர்கள் பங்கு கொண்டு ஒலி ஒளி காட்சியை கண்டு அன்னையின் ஆசியையும் பூஜையில் வைத்து வழிபட்ட அமிர்தப்பால் மற்றும் மங்களப் பொருட்களையும் பெற்று பயன் அடைய அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.